வீரப்பன் வேட்டையில் கஞ்சா வியாபாரி கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
சந்தன வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினர் கஞ்சா வியாபாரி ஒருவரைக் கைது செய்தனர்.
நீலாம்பூர் வனப் பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் நடமாட்டம் இருப்பதை அறிந்த அதிரடிப்படையினர் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கிருந்த அந்தக் கும்பல், போலீசார் வருவதைக் கண்டு தங்கள் வைத்திருந்த பொருட்களை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த 9 மூட்டைகளில், 7 ஐ கீழே போட்டு விட்டு ஓடிவிட்டனர். அப்போது இந்தக் கும்பலைச் சேர்ந்தரகு என்பவர் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் 250 கிலோ கஞ்சாவை அவர்கள் கைப்பற்றினர். இந்த கஞ்சா மதுக்கரைபோலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு செல்லப்பட்டது. கஞ்சா கடத்தல் கும்பலுக்கும் வீரப்பன் கும்பலுக்கும் தொடர்புஉள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications