தேர்தல் பணிகளில் ம.தி.மு.க. தீவிரம்
திருச்சி:
தமிழக சட்டசபையில் அதிகமான இடங்களை பெற்று தங்களுக்கென தனி இடம் பெறும் முயற்சியில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கிவருகின்றன.
இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஜெயலலிதாதலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தே.ஜ.கூட்டணியில் அங்கம் வகிக்கும்ம.தி.மு.க. இந்த முறை தமிழக சட்டசபையில் கணிசமான இடங்களை வென்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களைசட்டசபைக்கு அனுப்பி தங்கள் கட்சியின் தனித்தன்மையை நிலை நாட்டுவதில் மும்முரமாக உள்ளது.
இதற்காக எந்தெந்த இடங்களில் கட்சிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. யார், யாரை தேர்தலில் நிறுத்தினால் வெற்றிவாய்ப்பு அதிகம் என்பவை குறித்து அறிந்து தெரிவிக்குமாறு தனியார் நிறுவனம் ஒன்றிடம்கேட்டுக்கொண்டுள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அந்த நிறுவனம் இது குறித்து ரகசிய சர்வேஎடுத்து வருகிறது.
மேலும் மாவட்டம் தோறும் நிதியளிப்பு கூட்டம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துமாறு வைகோ கட்சியினருக்குஉத்தரவிட்டுள்ளார். இது கட்சியில் உள்ள கோஷ்டி பூசலை மறந்து அனைவரும் ஒன்றாக செயல்பட உதவும் எனஅவர் நம்புகிறார். தன் கட்சி எம்.எல்.ஏ.க்களை கணிசமான அளவில் தமிழக சட்டசபைக்கு அனுப்ப வைகோஎடுத்து வரும் முயற்சி வெற்றி பெறுமா என்பதற்கு வாக்காளர்கள் தான் பதில் கூற வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications