பா.ம.க. அமைச்சர்கள் ராஜினாமா .. வாஜ்பாய் நிராகரிப்பு
டெல்லி:
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் பொன்னுசாமி மற்றும் எரிசக்தித்துறைஅமைச்சர் சண்முகத்தின் ராஜினாமாவை, பிரதமர் வாஜ்பாய் நிராகரித்தார்.
மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் பொன்னுசாமி,ராஜினாமா குறித்த காரணங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை கூறுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தற்போது நிருபர்களுக்கு கூறுவதற்கு எதுவுமில்லை என்றார்.
ஆனால் இது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சி அமைச்சர்கள் ராஜினாமாசெய்ததற்கு காரணம் அவர்கள் தமிழகத்தில் .தி.மு.க.வினரால் ஒதுக்கப்படுவதாக எண்ணியதே காரணம் என்றனர்.தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க. கேட்ட அளவு தொகுதிகளை ஒதுக்கவும் தி.மு.க. சம்மதிக்கவில்லை எனகூறப்படுகிறது. தற்போது பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கும் என்ற எண்ணமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் பா.ம.க. தொடர்ந்து தே.ஜ. கூட்டணியில் நீடிப்பதாக பாரதீய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர்.பிரதமர் வாஜ்பாயும் பா.ம.க. அமைச்சர்கள் ராஜினாவை ஏற்க மறுத்துவிட்டார்.
பா.ம.க. அமைச்சர்களின் ராஜினாமா குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,இந்த முடிவு துர்திர்ஷ்டவசமானது. அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்த விதமான பிரச்சனையும்கிடையாது.
தமிழகத்தில், தமிழக ராஜீவ் காங்கிரசுடன் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அந்த பிரச்சனையும் சுமுகமாக தீர்த்துக்கொள்ளப்படலாம். இந்த மாதம் 16-ம் தேதி கருணாநிதி கூட்டியிருக்கும் தென் மாநில தே.ஜ. கூட்டணி கூட்டத்தில்பா.ம.க. , த.ரா.கா பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்டு விடும்.
தற்போது மத்திய அரசில் எந்த விதமான பிரச்சனையும் காணப் படவில்லை. பா.ம.க. தலைவர் ராமதாசும் தனதுமுடிவை மறு பரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கிறோம். அதே போல் ராஜினாமா செய்த அமைச்சர்களும்அவர்களது ராஜினாவை திரும்பப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications