திமுக கூட்டணியில் சேரத் தயார் .. கிருஷ்ணசாமி
சென்னை:
திமுக கூட்டணியில் சேர தயாராக உள்ளோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிகூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி திமுக அணியிலிருந்து விலகி, அதிமுக அணிக்குச் சென்று விட்டது. இதனால் தமிழகஅரசியல் கூட்டணிகளில் வரும் நாட்களில் விலகல் மற்றும் சேருதல் படலங்கள் அரங்கேறும் வாய்ப்புஅதிகரித்துள்ளது.
தற்போதைக்கு தலித் கட்சிகள்தான் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளன. டாக்டர் கிருஷ்ணசாமிதலைமையிலான புதிய தமிழகம் கட்சியும், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பும்தான் மிகப் பெரிய தலித் கட்சிகள்.
திருமாவளவன், மூப்பனார் என்ன சொல்கிறாரோ அதையே வழிமொழிவார். கிருஷ்ணசாமியைப் பொறுத்தவரைபா.ம.க. இருக்கும் அணியில் இடம் பெற மாட்டார் என்ற நிலை உள்ளது. எனவே அவர் திமுக பக்கம் சாயலாம்என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதை உறுதி செய்யும் வகையில், திமுக கூட்டணியில் சேர தயார் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி. சென்னையில்புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்துஆட்சேபனையில்லை. திமுக தரப்பில் அழைப்பு வந்தால் கூட்டணி குறித்துப் பேசத் தயார்.
எங்களது கட்சி இப்போது நல்ல நிலையில், வலுவான செல்வாக்குடன் உள்ளது. தலித் மக்களைக் கண்ணியமாகமதித்து நடக்கும் கூட்டணியில் சேர ஆர்வமாக உள்ளோம் என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications