• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூ.1கோடியில் மருத்துவ மூலிகை வளர்ப்பு

By Staff
|

கேள்வி - பதில்

கே: இப்பவும் நீங்கள் கை காட்டும் நபர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார் - என்று எங்கள்ஊர் பெரியவர் ஒருவர் சொல்கிறாரே ...?

ப: பெரியவரின் வார்த்தை, பொய்த்துப் போகாமல் இருக்க என்ன செய்வது . பேசாமல், மிட்டாய்க்காரர் ஈஓட்டுவது போல, நாலாபுறமும் கையை வீச வேண்டியதுதான்.

யார் முதல்வராக வந்தாலும், நான் கை காட்டியதவர்தான் வந்தார், என்று கூறி விடலாம், வேறு வழியில்லை.

கே: சமீபத்திய கருணாநிதி - ராமதாஸ் சந்திப்புக் கூட பரபரப்பாக பேசப்பட்டதே! இச் சந்திப்பு,கூட்டணிக்கு வலு சேர்க்குமா?

ப: நல்லவனுக்கு அழகு - சொல்லாமல் போவது, ராமதாஸ் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது.

கே: தமிழகத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்கிற கிராமத்து பெண்மணிக்கு, ஜீஜாபாய் விருதுவழங்கி,அவரின் சேவைக்காக அவர் காலைத் தொட்டு வணங்கிய பிரதமரின் செயல் பற்றி ...?

ப: பிரதமரின் நல்ல உள்ளத்தைக் காட்டுகிற ஒரு நிகழ்ச்சியாகவே இதை நான் கருதுகிறேன்.

கே: சட்டசபை தேர்தலுக்கு எல்லா அரசியல்வாதிகளும் தயாராகி விட்டார்கள். இனி நாம் (மக்கள்)என்ன செய்ய வேண்டும்?

ப: இந்த முறை யாரிடம் ஏமாறுவது - என்பதைப் பற்றி தீவிரமாக யோசிக்கத் தொடங்க வேண்டும்.

கே: கூட்டணிகள் முடிவாகாத நிலையில், தி.மு.க. தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று இந்தியா டுடேகணித்திருப்பது சரியா ...?

ப: சில மாதங்களுக்கு முன், துக்ளக் நிருபர்கள் பல தொகுதிகளைச் சுற்றிப்பார்த்து, மக்களைச் சந்தித்து. தெரிவித்தகருத்தும் இதுதான். இப்போதும் இது சரியாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால், போகப்போக, தேர்தலுக்குள்,என்ன நிலை தோன்றுகிறது என்று பார்க்க வேண்டும்.

கே: அரியலூரில் அண்மையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் கொடுத்த மனு, அமைச்சர் கலந்துகொண்ட விழா நடந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் கிடந்ததாக, அரியலூர்பேரூராட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த செய்தி, அதிர்ச்சியளிப்பதாக இல்லையா?

ப: மாநிலத்தில் குப்பைச் தொட்டி இருப்பது - அதிர்ச்சி தரும் செய்தியா என்ன? நான் அப்படி நினைக்கவில்லை.

கே: தீவிரவாதிகளுக்கு ஆதரவு என்று ஒரு விஷயத்தைத் தவிர்த்த விட்டுப் பார்த்தால், தி.மு.க. ஆட்சிஎப்படி...?

ப: தீவிரவாத ஆதரவைத் தவிர்த்து விட்டு, மற்றபடி பார்த்தால், முந்தைய, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை விட இதுமேல் - என்பதுதான் என் கருத்து.

ஆனால், உங்கள் வீட்டில் ஒரு சமையல்காரனை வேலைக்கு வைக்கிறீர்கள்: வீட்டுக்கு நெருப்பு வைத்து பொசுக்கிவிட திட்டமிடுகிற ஒரு கும்பலை அவன் ஆதரித்து, வீட்டிற்குள் அனுமதிக்கிறான்: அப்போது, இந்த ஒரு செயலைத்தவிர்த்துப் பார்த்து - அவன் சமையல் தேவலை - என்று தீர்மானித்து, அவனை மேலே வேலையில் தொடர்ந்துவைப்பீர்களா? அல்லது வேறு யாரை வைப்பது என்று யோசிப்பீர்களா?

கே: வழுக்கைத் தலை உடையவர்கள் அறிவாளிகள் என்று கூறுவது உண்மையா?

ப: நீங்கள் பார்க்கிற ஒரு மனிதனை வைத்துக் கொண்டு எல்லோரையும் அப்படி கூறி விட முடியாது.

கே: பிரதமர் வாஜ்பாய், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளை அதிகம் பின்பற்றுகிறாரா?பாரதிய ஜனதாவின் கொள்கைகளை அதிகம் பின்பற்றுகிறாரா?

ப: பின்பற்றுவது - என்றால், அதில் பின்னுவது வேறு, பற்றுவது வேறு. அவர் தனது பேச்சினால் பின்னுவது,பா.ஜ.க. கொள்கைகள்: அவருடைய நிர்வாகம் பற்றுவது தே.ஜ. கொள்கைகள்.

கே: இந்தியா டுடே நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் வாஜ்பாயின் செல்வாக்கு உயர்ந்துள்ள போதிலும்,தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செல்வாக்கு சரிந்தும், காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்தும் உள்ளதாகத்தெரிவித்துள்ளதே? இது பற்றி ...?

ப:ஆளும் கட்சி மீது அதிருப்தி ஏற்படுவது வழக்கம்தான். அந்த அதிருப்தி, கோபமாக மாறாத வரையில் பெரியஆபத்து இருக்காது.

கே: எந்தக் கட்சியுடனும் சமதா கட்சி இணைப்பு இல்லை என்று ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளதுபற்றி ...?

ப: சபாஷ்! அனைத்துக் கட்சியினருக்கும் இப்படி நன்மை செய்தவர், வேறு எவரும் இல்லை என்று அடித்துச்சொல்லலாம்.

கே: கட்டி முடித்து விற்பனையாகாமல் தேங்கியிருக்கும் வீட்டு வசதி வாரிய வீடுகளை, விரைவாகவிற்பது தொடர்பான அதிரடி முடிவுகளை தமிழக அரசு எடுத்திருப்பது குறித்து ...?

ப: சமத்துவபுரங்களைத்தான் முதல்வர் பெரிதும் நம்புகிறாரே? பேசாமல் இந்த குடியிருப்புகளையெல்லாம் சமத்துவபுரங்களாக்கி விடலாமே? வீடுகளை மலிவாகக் கட்டப்பட்டால்தான் சமத்துவபுரமா?

கே: 2001-ம் ஆண்டை பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஆண்டாக அறிவித்துள்ளாரே பிரதமர்வாஜாபாய்? இது குறித்து தங்கள் கருத்து என்ன?

ப: என்ன இது? புதிய வருடம் நல்லபடியாக அமைய வேண்டுமே என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். பிரதமர்ஏன் இப்படி பேசுகிறார்?

கே: மூன்றாவது அணி சரிப்படவில்லை என்றால், நான்காவது அணி உருவாகுமா?

ப: அவசியமே இல்லை. மூன்றாவது அணி வந்தால், அதுவே பல தொகுதிகளில், நான்காவதாக வந்து, நான்காவதுஅணி என்ற புகழைப் பெறும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X