"கடவுள் அருள் இருந்தால் வீரப்பன் பிடிபடுவான்
கோவை:
வீரப்பனை நேரில் போலீசார் பார்த்துள்ளனர். ஒரே ஒரு துப்பாக்கி மட்டும் அவர்கள் கையில் இருந்ததால் பிடிக்கமுடியவில்லை, கடவுள் கருணையிருந்தால் வீரப்பன் நிச்சயம் பிடிபடுவான் என அதிரடிப்படை கூட்டுத் தலைவர்ஐ.ஜி பாலச்சந்திரன் தெரிவித்தார்.
கோவை அருகே உள்ள பூலுவாபட்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள் போலீஸ்சந்திப்பு நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பூலுவாபட்டி பொதுமக்கள் வந்திருந்தனர். இவர்களுக்காக சிறப்பு பேருந்துவசதி, மற்றும் டெம்போக்களை போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கோவையில் நிருபர்களடையே ஐ.ஜி பாலச்சந்திரன் பேசுகையில், பொதுமக்கள்அளிக்கும் தகவல் அடிப்படையில் பல முறை நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். சிலமுறை தோல்விஅடைந்துள்ளோம்.
ஜனவரி 31ம் தேதி வீரப்பன் தப்பிச் சென்றுள்ளான். வீரப்பனை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள்பார்த்துள்ளனர். 5 குழுவினராகச் செயல்பட்டு வந்த இவர்கள் காடுகளில் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது இந்தப் பகுதியில் வீரப்பனை ஒரு குழுவினர் பார்த்துள்ளனர். ஆனால், அவர்களிடம் ஒரே ஒருதுப்பாக்கியிருந்ததால் சுட முடியவில்லை. கடவுள் அருள், கருணை இருந்தால் வீரப்பனை நிச்சயம் பிடித்துவிடுவோம்.
தமிழக கேரள எல்லைப் பகுதியில் வீரப்பன் ஒளிந்திருப்பதை உறுதி செய்து விட்டோம். எனவே வீரப்பனைப்பிடிக்க பொதுமக்கள் தகவல் கொடுத்து உதவ வேண்டும். எங்களிடம் நேரடியாகவோ, அல்லது அந்தந்த ஊர்பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகவோ, தகவல் அளிக்கலாம்.
வல்லரசான அமெரிக்காவே ஒரு தீவிரவாதியை (பின் லேடன்)ப் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. ஆனால்நம்மால் வீரப்பனை நிச்சயம் பிடிக்க முடியும். அதற்கு உங்கள் ஒத்துழைப்புத் தேவை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications