சோ ஏன் குற்றம் சாட்டுகிறார்? .. கருணாநிதி வியப்பு
சென்னை:
பிரபல பத்திரிக்கையாளர் சோ, தமிழக முதல்வர் கருணாநிதி தீவிரவாதிகளைஆதரிப்பதாக கூறியதற்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் போன்ற தீவிரவாதிகளை ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாபோன்றோர் கொலப்பட்ட பிறகும், அதற்கு அடுத்த அண்டு ராஜீவ் காந்திகொல்லப்பட்ட பிறகும் ஆதரித்தார் கருணாநிதி என ஆங்கில நாளிதழுக்கு அளித்தபேட்டி ஒன்றில் சோ கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து கடும் கோபத்துடன் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
சோ ராமசாமி தற்போது அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைஆதிரித்து வருகிறார். அவர் ஆதரிக்கும் ஜெயலலிதா 1990 மற்றும் 1991-ம்ஆண்டுஆங்கில பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் விடுதலைப் புலிகளுக்குஆதரவளிப்பதில் தவறில்லை என கூறியிருந்தார்.
வங்கதேசத்திற்கு விடுதலை பெற்று தர இந்தியா பாகிஸ்தானுடன் போரிட்டது. அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தர இந்தியா இலங்கையுடன் போர்தொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் தமிழம்முழுவதும் அதை எதிர்த்து போராட்டம் நடைபெறும் எனவும் கூறியிருந்தார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்தது போல் நான்ஆதரவளிக்கவில்லை என என்னை குறை கூறியிருந்தார்.
இதையெல்லாம் மறந்து விட்டு சோ இப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்து என்மீது குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது.
நான் ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னும் விடுதலை புலிகளுக்கு ஆதரவளித்தேன்என்றால் சோ ஏன் 1996-ம் ஆண்டு தேர்தலின் போது த.மா.கா.வுக்கும் தி.மு.க.வுக்கம்உறவு ஏற்படுத்த தூதுவராக செயல்பட்டார்.
இது போன்ற தவறான பிரச்சாரங்களால் திசை மாறி போய்விடக்கூடாது என மக்களைகேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications