நாடு அமைதியாக இருக்க வேண்டும் .. நீதிபதி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பள்ளிப்பட்டு என்ற இடத்தில் புதிதாக ஒரு மாவட்ட முன்சீப் கோர்ட்துவக்கி வைக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் புதிய நீதிமன்றத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்உயர்நீதிமன்ற நீதிபதி ஞானப்பிரகாசம் பேசுகையில், நாடு அமைதியாக இருக்க வேண்டும். சமூக, பொருளாதாரவளர்ச்சியை நோக்கி நமது முன்னேற்ற நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
கோர்ட்டுகளிலும், காவல் நிலையங்களிலும் ஏராளமான வழக்குகள் உள்ளன. இவை குறைக்கப்பட வேண்டும்.பள்ளிப்பட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தேவை என்ற கோரிக்கை வந்தால் நிச்சயம் அதுபரிசீலிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications