கருணாநிதியைச் சந்தித்தனர் பா.ஜ.க. தலைவர்கள்
சென்னை:
முதல்வர் கருணாநிதியை, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சனிக்கிழமை மாலைசந்தித்துப் பேசினார்கள்.
தமிழக சட்டசபைக்கு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் வருகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில்சுறுசுறுப்படைந்துள்ளது. இந்த நிலையில், பா.ம.க. அதிமுக கூட்டணிக்குத் தாவி விட்டது.
இந்தச் சூழ்நிலையில், முதல்வர் கருணாநிதியை, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பு முதல்வர் கருணாநிதியின்கோபாலபுரம் வீட்டில் நடந்தது.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக தேர்தல் பார்வையாளருமான ராமராவ்,மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு குறித்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராமராவ் தேர்தல்பார்வையாளராக நியமிக்கப்பட்டபின் முதல்வர் கருணாநிதியை முதல் முறையாக சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பாகும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications