இயற்கைச் சீற்றம் .. பிரதமர் தலைமையில் 37 பேர் கமிட்டி
டெல்லி:
இந்தியாவில் இயற்கைச் சீற்றங்கள் வந்தால் அதை சமாளிக்க பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 37 பேர் கொண்டதேசியக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய கமிட்டி, திடீரென்று இயற்கைச் சீற்றம் ஏற்பட்டால் அதை எதிர் கொள்வது குறித்தும், நிவாரணநடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோனைகள் வழங்கும்.
குஜராத்தில் மிகக் கடுமையான பூகம்பம் ஏற்பட்டதையடுத்து டெல்லியில் பிப்ரவரி 3 ம் தேதி அனைத்துக் கட்சிகூட்டம் நடத்தப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிரதமர் தலைமையில் தேசியக் கமிட்டி அமைக்கப்படவேண்டும். இந்தக் கமிட்டி இந்தியாவில் திடீரென்று ஏற்படும் இயற்கைச் சீற்றங்களை தடுக்க ஆலோசனைகள் கூறவேண்டும்.
இந்தக் கமிட்டியினர், குஜராத் மாநிலத்தில் பூகம்ப நிவாரணப் பணிகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவிகள் செய்வது போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து பிரதமர் தலைமையில் 37 பேர் கொண்ட இயற்கைச் சீற்ற நிவாரணக் கமிட்டி செவ்வாய்க்கிழமைஅமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் உள்துறை, ராணுவ, நிதி, வேளாண்துறை, ஜவுளி, நகர்ப்புற மற்றும்நாடாளுமன்ற விவகாரத்துறை திட்டக் கமிஷன் துணைத் தலைவர் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆகியோர்பங்கேற்பர்.
தேசியக் கமிட்டியில், தேசியவாதக் காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் துணைத் தலைவராக இருப்பார் என்றுமுடிவெடுக்கப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.


Click it and Unblock the Notifications
