For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

த.மா.கா. வை வரவேற்கும் பா.ஜ.க.

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத்தின் நன்மையைக் கருதி தமிழ் மாநில காங்கிரஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறுவதை வரவேற்கிறேன் என தமிழக பாரதியஜனதாக் கட்சியின் பொதுச் செயலர் இல. கணேசன் கோவையில் தெரிவித்தார்.

கோவையில் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கோவையில் நடக்கும் சுதேசி விழிப்புணர்வு பொருட்காட்சியை துவக்கி வைக்க பாரதப் பிரதமர் வாஜ்பாய் கோவை வருகிறார். கோவை மாநகரில் பலபுதிய யுக்திகள் தோன்றுவதோடு இங்கு பொருட்கள் உற்பத்தியும் பெருமளவில் உள்ளது. இங்கு இக்கண்காட்சி நடைபெறுவது பொறுத்தமானநிகழ்ச்சியாகும். பகல் 12. 30 மணி அளவில் கோவைக்குத் தனி விமானம் மூலம் வரும் வாஜ்பாய், 2 மணி அளவில் பொருட்காட்சியைத் துவக்கிவைக்கிறார். பின்னர் மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முன்னதாக வெடிகுண்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்குநிவாரணத் தொகை வழங்குகிறார்.

மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் சார்பாக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று,வைகோ உள்பட தி.மு.க வின் பிரதிநதிகளும் கலந்து கொள்கின்றனர். சென்னையில் தி.மு.க பொதுக் குழுக் கூட்டம் நடப்பதால் இதில் முதல்வர்கலந்து கொள்ள இயலவில்லை.

தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ்சுக்கு சோ டைரக்டராக இருந்தால், "ஜட்ஜ் மென்ட் ரிசர்வ்டு என்று அர்த்தம்.அவரது டைரக்ஷன், அ.தி.மு.க பக்கம் இருக்குமானால், அது "நேர்மை உறங்கும் நேரம். ( சோவின் இந்த இரண்டு தலைப்பிலான நிகழ்ச்சிகள்கோவையில் நடந்தவை).

தேசி ய ஜனநாயகக் கூட்டணியில் நீடித்து வந்த சிக்கல், பா.ம. க விலகியதால் தீர்ந்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக ராஜிவ் காங்கிரஸ்கட்சியால் வெளியேறவில்லை. அவர் ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியில் சேர முடிவு செய்து விட்டார். எனவே இதற்கான கராணத்தைத் தான்இவ்வளவு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்தார். அதற்காக த.ரா.க பிரச்னையைப் பயன்படுத்திக் கொண்டார். பாட்டளி மக்கள் கட்சியின் முடிவால்எவ்வித வருத்தம் இல்லை.

தற்போது தமிழ் மாநில காங்கிரசில் பேரம் பேசும் நிகழ்ச்சி நடந்து கொண்டுள்ளது. யாருக்கு சீட் அதிகம் என்ற பேச்சில் இரண்டு அணிகளும்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை ஒரு விதத்தில் பாராட்டியே ஆக வேண்டும். ராமதாசைப் போல அல்லாமல்பொறுமையாக முடிவை எடுக்கிறார். அ.தி.மு.க உடனடியாக முடிவெடுக்கப் போவதாக அறிவித்தாலும், அந்தமறைமுக மிரட்டலுக்குப் பணியாமல், ஒரு வார காலம் ஜெயலலிதா தனது முடிவைத் தள்ளிப் போடவைத்திருக்கிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் எந்த முடிவை எடுத்தாலும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நன்மையாகவேஅமையும். ராமதாஸ்., பெரிய அரசியல் சாணக்கியன் என்ற நினைப்பில் சில கணக்குகளைப் போட்டு வருகிறார்.பாட்டளி மக்கள் கட்சிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பலம் இப்போது இல்லை. அ.தி.மு.க கூட்டணியில்இப்போது இருந்தால் புதுவையில் முதல்வராகலாம், அடுத்து தமிழகத்தில் அதிக இடங்களைப் பெற்றுஎதிர்க்கட்சியாகலாம் என்ற கணக்குப் போடுகிறார். ஆனால், இது வெறும் பகல் கனவே ஆகும்.

தமிழ் நாட்டில் 62 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. இதில் எல்லாத் தொகுதிகளிலும்போட்டியிட மாட்டோம். எங்கள் அணியில் இடம் பெறப்போகும் கட்சிகள் எவை, எவை என முடிவு செய்தபிறகுதான், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவோம். "கொடுத்தார், வாங்கினார், எடுத்தார் என பிச்சைக்காரத் தனமான நிலை எங்கள் அணியில் இல்லை, மாறாக, இக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தான் நடக்கும் .

தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, "பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்பொன்னுச்சாமி மீது கூறிய வழக்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார் இல. கணேசன்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X