கட்ச்சில் 11 முறை நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனவரி 26 ம் தேதி பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 11 முறை நிலநடுக்கம்உணரப்பட்டது என்று டெல்லியிலுள்ள பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கட்ச் மாவட்டத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 3.0 மற்றும் 3.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்துடன் கட்சில்உணரப்பட்ட நிலநடுக்கங்களின் எண்ணிக்கை 325 ஐத் தொட்டுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் நள்ளிரவு தொடங்கிய நிலநடுக்கம் வியாழக்கிழமை காலை 8.51 மணி வரை நீடித்தது. முன்னதாக கடந்த பிப்ரவரி 8 ம் தேதிஅகமதாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கட்ச் மாவட்டத்தில் பல முறை நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications