2 யானைகள் மர்மமான முறையில் சாவு
கோவை:
கோவை மாவட்டம் மனாபதி காட்டுப் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் இரண்டு யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள இந்திரா காந்தி மிருகக்காட்சி சாலையில் உள்ள இரண்டு பெண் யானைகள் கடந்த 2 நாட்களாககாணாமல் போனது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வால்பாறை வனத்துறை அதிகாரி தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், காணாமல் போன இரண்டு பெண் யானைகளும் இயற்கையாகத்தான்இறந்து போயிருக்க வேண்டும்.
20 வயதான பெண் யானை பன்னீர்மேடு எஸ்டேட் அருகே வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் உடலை கால்நடை மருத்துவர்ஒருவர் பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கைகள் சாவிற்கான உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்கப்படுவதற்காக சென்னை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதே போல் சனிக்கிழமை மாலை 17 வயதான பெண் யானை ஒன்று தோணி முடி பகுதியில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த யானையின்சாவிற்கான காரணம் குறித்து அறிவதற்காக பிரேத பரிசோதனை அறிக்கைகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications