காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க பாக்.தயக்கம்
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண பாகிஸ்தான் முயற்சி செய்ய தயக்கம் காட்டுகிறது என்றுநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது நாளான திங்கள்கிழமை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. நாடாளுமன்ற ராஜ்யசபா மற்றும்லோக்சபா ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்பேசியதாவது:
நெடுங்காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பாகிஸ்தான் தயக்கம்காட்டுகிறது. காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க பாகிஸ்தான் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானின் இந்த வறட்டுக் கவுரவத்தாலும், பிடிவாதத் தன்மையாலும் நாள்தோறும் அப்பாவிப் பொதுமக்கள்பலர் கொல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதைத் தவிர்ப்பதை விட்டு விட்டு, இந்தியா அறிவித்த சண்டைநிறுத்தத்தையும் மீறி வன்முறையையும், பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து விடும் செயலில் ஈடுபட்டு வருகிறதுபாகிஸ்தான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா:
இந்தியாவில் பல ஆண்டுகளாக பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது. இதைநிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு கூட்டு உடன்பாட்டிற்கு வர வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் இருக்கும் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும்.
வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை களையப்பட வேண்டும். தற்போது தகவல் தொழில் நுட்பத் துறை மிகவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தத் துறையில் இந்தியா இன்னும் நன்கு செழித்து வளர வேண்டும் என்றுதனது பட்ஜெட் தொடக்க உரையில் கூறினார் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications