அயல்நாட்டுக்கு கடத்தப்பட இருந்த 1,100 பாம்புகள் மீட்பு
கோலாலம்பூர்:
மருத்துவ நோக்கத்திற்காக கிழக்கு ஆசிய சந்தைக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த 1,100 பாம்புகளை, மலேசியாவின் வனவிலங்கு அதிகாரிகள் மீட்டனர்.
கோலாலம்பூரில் இருக்கும் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தில் இருந்த பெட்டியில் நாகப் பாம்பு மற்றும் வேறு வகையைச் (ஓரியன்டல்வகை பாம்பு) சேர்ந்த பாம்புகள் சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.
இது குறித்து சேலாங்கர் மாநிலத்தில் இருக்கும் வன விலங்கு தேசிய பூங்காவின் இயக்குனர் ஹபாஷ் முதா தெரிவிக்கையில், தற்போது மீட்கப்பட்ட பாம்புகளின்மதிப்பு 4,453 டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை மலேசியாவிலிருந்து அருகில் இருக்கும் நாட்டிற்கு கடத்தப்பட இருந்தன.
பாம்புகளை விமான நிலையத்திற்கு கொண்டு வந்த லாரி ஓட்டுனர் பாம்புகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்த கேள்விகளுக்குசரியாக பதிலளிக்காத காரணத்தாலும், பாம்புகளை கொண்டு வந்ததற்கு முறையான அனுமதி பத்திரங்களை கொடுக்காததாலும் கைது செய்யப்பட்டார்.அவருடன் இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
சென்ற வருடம் மட்டும் வனவிலங்கு அதிகாரிகள் தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாம்புகளை மீட்டுள்ளனர். பாம்புகள்,கடல்ஆமைகள், அரிதாக் காணப்படும் பறவைகள் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு கடத்தல்காரர்கள் மலேசியாவைபயன்படுத்துகின்றனர் என கூறினார்.
மலேசியாவில் வன விலங்கு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கையிலேயே இதுதான் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பு கறியும், பாம்பு ரத்தமும் சீனாவில் மருந்துக்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது பல நோய்களை குணப்படுத்தவும், பார்வைகுறையை சரிபடுத்தவும், பால்வினை குறைவை சரி செய்யவும் பயன்படுத்தப்படுத்துகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications