ஸ்டாலின் சொத்து வழக்கில் புதிய திருப்பம்
சென்னை:
சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்துள்ளது குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மார்ச் 8-க்குள் விசாரித்து அறிக்கை அளிக்கவேண்டும் என சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
சமூக சேவகர் செண்பகமூர்த்தி என்பவர் இந்த அப்பீலை தாக்கல் செய்துள்ளர். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஸ்டாலினுக்கு எதிரான மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி, விசாரணைக்கான காலவரம்பை நிர்ணயித்ததுடன் ஸ்டாலினின் வாக்குமூலத்தையும் தனதுதீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் தவறான முன்னுதாரணத்திற்கு அடிகோலியுள்ளார்.
வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு குறுகிய கால அவகாசம் நிர்ணயித்திருக்கிறார். இதன் மூலம் விசாரணை சரியாக நடைபெறாது. எனவே,ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதியின் உத்தரவை தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதனிடையே, இவ்வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரிய அதிமுக வக்கீல் பிலிப் தாமஸ், தான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிசாரணையில் உள்ள நிலையில் செஷன்ஸ் நீதிமன்றம் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் கோரியிருந்தார்.
இவரது கோரிக்கையை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் நிராகரித்து விட்டதால் அந்த உத்தரவை தடை செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.
தேர்தல் வருவதால் அவசரகதியில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை முடித்து உண்மையை மறைக்க ஸ்டாலின் முயல்கிறார். அவரின் தந்தை (கருணாநிதி)முதல்வராக இருப்பதால் அவரது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தாது.
எனவே, பாரபட்சமற்ற வகையில், காலவரை நிர்ணயிக்காமல் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தாமஸ் தனது அப்பீலில் கோரியுள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications