அ.தி.மு.க. கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
சென்னை:
அ.தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள போவதாக மூவேந்தர் முன்னேற்றக்கழகம் அறிவித்துள்ளது.
அதன் தலைவர் பிரேம்குமார் வாண்டையார், புதன்கிழமையன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, புதுக்கோட்டையில் பிப்ரவரி 18ம் தேதிநடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியுன் சேர்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
வருகின்ற சட்டபேரவை தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட விரும்பிய போதும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் தொகுதிகளின்எண்ணிக்கை ஜெயலலிதாவின விருப்பத்தை பொருத்தது.
12 மாவட்டங்களில் கட்சியின் பலம் அதிகம் எனவே, குறிப்பிடத்தக்க தொகுதிகளை ஜெயலலிதா அளிப்பார் என நம்புகிறோம்.
சமீபத்தில் அ.தி.மு.க.கூட்டணியில் சேர்ந்த பா.ம.க.வுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவதில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்திற்கு பிரச்சினை எதுவும்இல்லை என தெரிவித்தார.
யு.என்.ஐ.


Click it and Unblock the Notifications
