ஏமாற்றுகிறது இந்தியா: பாகிஸ்தான் புலம்பல்
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டை நிறுத்தத்தை நீட்டித்து உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதுஇந்தியா என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
காஷ்மீரில் அமைதி ஏற்படுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு சண்டை நிறுத்தத்தை மே மாதம் 31 ம் தேதி வரைநீட்டித்துள்ளது இந்தியா.
சண்டை நிறுத்தத்தை நீட்டித்திருப்பதன் மூலம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகள் மத்தியில் முத்தரப்புபேச்சுவார்த்தை ஏற்படும் என்ற இந்தியாவின் கணிப்பு தவறானது.
சண்டை நிறுத்த நீட்டிப்பு என்ற பெயரில் ஆதாயம் தேடப் பார்க்கிறது இந்தியா. ஆனால் சண்டை நிறுத்தத்தால்பிரயோஜனமில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறையும், துப்பாக்கிச் சூடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் லஸ்கார் ஈ தொய்பா மற்றும் ஹர்கத் உல் முஜாஹிதின் ஆகிய தீவிரவாத அமைப்புக்கள் சண்டைநிறுத்த நீட்டிப்பை நிராகரித்ததை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் தாக்குதலைத் தொடர்வோம்என்று கூறியிருப்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
காஷ்மீரில் அமைதி என்று கூறிக் கொண்டு ரம்ஜானை முன்னிட்டு சண்டை நிறுத்தத்தை அறிவித்தது இந்தியா. இதுமூன்று முறை நீட்டிக்கப்பட்டது. அதற்குப்பிறகு மே 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்டை நிறுத்த நீட்டிப்பு ஒரு நாடகம். உண்மையிலேயே அமைதி ஏற்பட இந்தியா விரும்பியிருந்தால் முத்தரப்புப்பேச்சுவார்த்தைக்கு அடிகோலியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications