காஷ்மீர் சண்டை நிறுத்த நீட்டிப்பு: தீவிரவாத இயக்கங்கள் நிராகரிப்பு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மே மாதம் 31 ம் தேதி வரை இந்திய அரசு நீடித்துள்ள சண்டை நிறுத்தத்தை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள்நிராகரித்துள்ளன.
இருப்பினும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழும் மக்கள், சண்டை நிறுத்த நீட்டிப்பை வரவேற்றுள்ளனர். அவர்கள் கூறுகையில், சண்டை நிறுத்த நீட்டிப்புகாஷ்மீரில் அமைதி ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆதரவு தெஹ்ரீக்-உல்-முஜாஹிதின் தீவிரவாத அமைப்பு செய்தித் தொடர்பாளர், சண்டை நிறுத்த நீட்டிப்பு குறித்து கூறுகையில்,
ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்பட இந்தியா விரும்புகிறது. இன்னொரு பக்கம் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களைப் பிறநாடுகளிலிருந்து வாங்கிக் குவிக்கிறது.
காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்று இந்தியா உண்மையிலேயே விரும்பினால், இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள்அனைவரையும் இந்தியா முதலில் விடுவிக்க வேண்டும். பின்னர் அவர்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போது தான் காஷ்மீர்பிரச்சனையில் முறையான தீர்வு விரைவில் ஏற்படும் என்றார்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான அல்-ஓமர்-முஜாஹிதின் தலைவர் முஸ்தக் அகமது சர்கார் கூறுகையில், எங்கள் அமைப்பு காஷ்மீரில் சண்டைநிறுத்த நீட்டிப்பை நிராகரிக்கிறது. நாங்கள் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.
ஏற்கனவே ரம்ஜான் மாதத்தின்போது அறிவிக்கப்பட்டிருந்த சண்டை நிறுத்த நீட்டிப்பை நாங்கள் நிராகரித்திருந்தோம். அதே போல் இப்போதும் சண்டைநிறுத்த நீட்டிப்பை நிராகரிக்கிறோம் என்றார்.
இவர் 1999 ம் ஆண்டு இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தீவிரவாதி. அதாவது கான்டகாரில் இந்திய விமானம் கடத்தப்பட்ட போது இவரையும்மேலும் இரண்டு தீவிரவாதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கெடு விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லஸ்கார்-ஏ-தொய்பா, ஜெயிஷ்-ஈ-முகமது மற்றும் ஹர்கத்-உல்-முஜாஹிதின் ஆகிய தீவிரவாத அமைப்புக்களும் சண்டை நிறுத்த நீட்டிப்பை ஏற்கனவேநிராகரித்து விட்டன.
இதற்கிடைய, காஷ்மீரில் வாழும் பொதுமக்கள் கூறுகையில், காஷ்மீரில் இனி சண்டையே கூடாது. சண்டை நிறுத்தம் மொத்தமாக நீட்டிக்கப்பட வேண்டும்.கடந்த 10 வருடங்களில் இப்போது தான் எங்களால் எவ்வித பயமும் இன்றி தூங்க முடிகிறது என்றனர்.
இருப்பினும் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் வசித்து வரும் மக்கள், சண்டை நிறுத்த நீட்டிப்பு குறித்து அவ்வளவு ஆர்வம்காட்டவில்லை.
சண்டை நிறுத்தம் அறிவித்திருந்த போதிலும், ஸ்ரீநகரில் லாக்கப் சாவு அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூடு ஆகியவை அமைதியைக் குலைக்கும்படிநடந்தன. இந்நிலையில் பிரதமர் வாஜ்பாய் சண்டை நிறுத்தத்தை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது என்று காய்கறி வியாபாரிஒருவர் கூறியுள்ளார்.
அஜாஸ், பன்டிபோரா, பாரமுல்லா, பால்வா, பாதாம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறுகையில், வாகனங்களில் வருவோரை சோதனை செய்கிறோம்என்று கூறிக் கொண்டு பாதுகாவலர்கள் பயணிகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றனர்.
அகில இந்திய ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் பட் கூறுகையில், சண்டை நிறுத்த நீட்டிப்பை இன்னும் வலுவுள்ளதாக மாற்றும் வகையில்பாகிஸ்தானுடனும், பல்வேறு தீவிரவாத அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உயர் மட்டக் குழு ஒன்றை இஸ்லாமாபாத் அனுப்ப முடிவுசெய்துள்ளோம். மேலும் சண்டை நிறுத்தம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது என்று கூற முடியாது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications