பிரச்சனையில் பைக் விளம்பரம்
டெல்லி:
பற்பசை விளம்பரம் தொலைக்காட்சியில் தடை செய்யப்பட்ட பின் தற்போது மோட்டார் சைக்கிள் விளம்பரம் ஒன்று தடை செய்யப்பட உள்ளது.
தற்போது தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மோட்டார் சைக்கிளுக்கான விளம்பரம் ஒன்றில் ஆண் ஒருவர் தனது மேல் சட்டையை களைந்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளை ஆசையுடன் தடவிக் கொடுப்பது போலவும். அதை ஒரு பெண் பார்ப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இது மிகவும் தரமற்ற, ஆபாசமான விளம்பரம் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாக அதிகாரிகள் கூறுகையில், அரசு மக்களின் உணர்வுகளை மதிக்கிறது.மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்த விளம்பரம் விரைவில் தடை செய்யப்படும் என்றனர்.
முன்னதாக பற்பசை விளம்பரம் ஒன்றில் சீருடை அணிந்த காவல்துறை அதிகாரி தூக்கு தண்டனை கைதியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரைமுத்தமிடுவதாக விளம்பரம் வந்தது.
அது தரக்குறைவற்ற ரசனையை தூண்டியதால் அந்த விளம்பரத்தை தடை செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் தொலைக்காட்சிநிறுவனங்களுக்கும் அந்த விளம்பரத்தை தடை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் விளம்பரம் தற்போதுதடை செய்யப்பட உள்ளது.
அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த விளம்பரத்தை தடை செய்யும் முடிவு அமைச்சகத்தால் எடுக்கப்படவில்லை. தொலைக்காட்சி நிலையத்தின் வர்த்தகதுறையால் எடுக்கப்பட்டுள்ளது.
பற்பசை விளம்பரம் குறித்து புகார்கள் கடந்த 3 மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த விளம்பரத்தை தடை செய்வது எனதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்யும் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது..
தன்னாட்சி அளிப்பது சரிதான். ஆனால் மக்கள் உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்த விளம்பரத்தை அமைச்சரும் பார்த்துள்ளார். இது குறித்து அவர்எங்களிடம் விவாதித்தார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்தி திரைப்படத்தின் தரங்கள் குறித்தும், ஒளிபரப்பப்படும் பாடல்களின் தரம் குறித்தும் மக்களிடமிருந்து புகார்கள்வருகின்றன என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications