என் மகன் பாண்டிச்சேரி முதல்வரா?: ராம்தாஸ் மறுக்கிறார்
சென்னை:
தன் மகனை பாண்டிச்சேரியில் போட்டியிட வைக்கும் எண்ணமோ அல்லதுபாண்டிச்சேரியின் முதல்வராக்கும் எண்ணமோ தமக்கு இல்லை என பாட்டாளி மக்கள்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ் கூறியதாவது:
பாண்டிச்சேரியில் அ.தி.மு.க. தலைமையிலான அணியை ஏற்று நடத்துமாறுஜெயலலிதா என்னிடம் உத்தரவாதம் எதுவும் கொடுக்கவில்லை.
பாண்டிச்சேரி விவகாரம்தான் காங்கிரஸ், த.மா.கா. கட்சிகள் அ..தி.மு.கவுடன் தேர்தல்கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என சிலர் கூறுகிறார்கள். இந் நிலையில்நான் இது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை.
விடுதலைப் புலி ஆதரவாளர்களான பா.ம.கவை எப்படி சேர்க்கலாம் என அ.தி.மு.க.அணியில் உள்ள மற்ற கூட்டணி கட்சிகள் கேட்டன. அவர்களுக்கு ஜெயலலிதாவேதக்க பதிலளித்து விட்டார்.
அ.தி.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டாலும் அவர்கள்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவுடன் இருக்கிறார்கள். கூட்டணிஅமைத்திருப்பதன் மூலம் அனைத்து தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும்.
தி.மு.க. கூட்டணி பூஜ்ய கூட்டணி. தமிழகம் முழுவதும் தி.மு.க.வுக்கு எதிரானநிலைதான் காணப்படுகிறது. காங்கிரசும், த.மா.கா.வும் அ.தி.மு.க. அணியில்சேர்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது,
அந்த இரு கட்சிகளும் பெரிய கட்சிகள். அவர்களுடன் என்னுடையது போன்ற சிறியகட்சிகள் பேசி அவர்களை சமாதானப்படுத்த முடியாது. இதில் நிலவி வரும் அனைத்துபிரச்சனைகளையும் ஜெயலலிதா களைந்து அனைவரையும் திருப்தி அடையவைப்பார்.
தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.விடம் இன்னும் பேச்சு வார்த்தை எதுவும்நடத்தவில்லை. மார்ச் மாதம் 1-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் வராது என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications