கடுங்குளிரில் சிக்கி உயிர்பிழைத்த குழந்தை

Subscribe to Oneindia Tamil

எட்மன்டன் (கனடா):

கடுங்குளிரில் சிக்கி இருதய செயல்பாடும் நின்றுபோன பின்னாலும் ஒரு குழந்தை உயிர் பிழைத்தது.இது மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனடாவின எட்மன்ட் நகர ஸ்டோலரி குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றின் டாக்டர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

கடந்த சனிக்கிழமையன்று, தனது தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த, 13 மாத குழந்தை ஒன்று தனது வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டது. குளிருக்குதேவையான பாதுகாப்பு உடைகள் அணியாத அக்குழந்தை அங்கு நிலவிய மைனஸ் 24 டிகிரி வெப்பநிலையை தாங்க முடியாமல் சுருண்டுவிட்டது.

சில மணிநேரங்கள் கழித்தே தனது குழந்தை காணாததை அறிந்த தாய், அதனை தேடிய போது பக்கத்து வீட்டின் பின்பகுதியில் சுருண்டு கிடந்திருக்கிறது.கடுங்குளிரால் குழந்தை பாதிக்கப்பட்டதை அறிந்த தாய் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்.

குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அதன் உடல் வெப்பநிலை பாதியளவாக இருந்ததோடு (அதாவது சாதாரண வெப்பநிலையான 32 டிகிரிக்கு பதில் 16டிகிரி சென்டிகிரேட்). குழந்தையின் இருதயம் உள்ளிட்ட பகுதிகள் செயல்படாததால் குழந்தை இறந்திருக்கக்கூடும் என தெரிவித்தனர்.

நம்பிக்கை இழந்தநிலையில் தான் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிரித்துக் கொண்டே விழித்துப் பார்த்தாள் அந்தக் கைக் குழந்தை. குழந்தைஇறந்து விட்டதாக நினைத்து மயக்கமடைந்த அதன் தாயும் குழந்தை பிழைத்ததை அறிந்து ஆனந்தத்தில் திக்குமுக்காடிப்பானார்.

கடுங்குளிரில் பாதிக்கப்பட்ட குழந்தையின் ரத்த ஓட்டம் குறைய குறைய மூளை செயல்படுவதற்கு தேவையான ஆக்ஸிஜன் சப்ளையும் குறைந்து கொண்டேவந்துள்ளது. இதனால் அனைத்து உடல் உறுப்புகளின் செயல்பாடும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இன்னும் சில மணிநேரங்கள் கழித்து வந்திருந்தால் உடலின்செயல்பாடுகள் அனைத்தும் நின்று குழந்தை இறந்திருக்கும் என கூறினர்.

குழந்தையின் செயலால் விளைந்த இவ்விபரீதம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யவிரும்பவில்லை கனடா போலீஸ் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+