சிதைக்கப்படும் மொட்டுக்கள்
கொழும்பு:
இலங்கையில் தொடர்ந்து வரும் இனக்கலவர பிரச்சனை ஒரு புறம் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையும்அதிகரித்து வருகிறது.
இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் குற்றங்களில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்தாண்டு 1200வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறும் இலங்கையின் நீதித்துறை, நடைபெறும் சம்பவங்களில் பாதிதான் புகார் செய்யப்படுகின்றன என்கிறது.
இதனிடையே, நீதித்துறை நடவடிக்கைகளால் அலைக்கழிக்கப்படும் குழந்தைகளை காக்க, குழந்தைகள் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்கதனி நீதிமன்றம் அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு உகந்த சூழ்நிலையில் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளை பாழாக்கும் பாதகர்களில் 90 சதவீதம் பேர் இலங்கைவாசிகளே எனக்கூறும் அதிகாரிகள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும்வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் பிடிபடாமல் நாட்டை விட்டு தப்பி விடுகின்றனர் என்கின்றனர். குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தர வேண்டியஆசிரியர் 9வயது பெண் குழந்தையை கர்ப்பமாக்கிய கொடுமையும் நிகழ்ந்துள்ளது.
1998ம் ஆண்டு திருத்தப்பட்ட இலங்கையின் சட்டப்படி இத்தகைய குற்றங்களுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிஒன்றின் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட காரணமாக இருந்த பள்ளியின் இசைப்பயிற்சி ஆசிரியர் ஒருவரும், பள்ளியின் உணவக பணியாளர் ஒருவரும்முதன்முறையாக 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.
இத்தகைய கொடுமைகளை புரியும் கயவர்களுக்கு இத்தண்டணை ஒரு பாடமாக இருக்கும் என இத்தண்டனையை வரவேற்ற மெளரீன சேனேவீரத்னேஎன்பவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications