குஜராத்துக்கு துபாய் குதிரைகள்
துபாய்:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 80 அரேபியக் குதிரைகளைக் கொடுப்பதாக துபாய் கூறியுள்ளது.
இதுகுறித்து, துபாயிலுள்ள இந்திய பொதுக் கவுன்சில் உறுப்பினர் அசோக் முகர்ஜி கூறியதாவது:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாய் ஏற்கனவே உதவி செய்துள்ளது. தற்போது, துபாயிலிருந்து 80 குதிரைகளை கொடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குதிரைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை குஜராத் அரசு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக குஜராத்அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அரேபியக் குதிரைகளின் விலைகள் சர்வதேச சந்தைகளில் அதிக அளவில் இருக்கும். குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகஏற்கனவே துபாயிலுள்ள பல இந்திய அமைப்புக்கள், ரூ 49 மில்லியனை பிரதமர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.
வளைகுடா நாடுகளிலிருந்து, குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண நிதியில் துபாய் தான் அதிக அளவு நிதி வழங்கியுள்ளது.
மேலும் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்பளிகள், உணவுப் பொருட்கள், மருந்துகள், துணி வகைகள், ஷூக்கள்ஆகியவை ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மக்களுக்காக நிதி கொடுக்க பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவு நிதி கொடுத்துள்ளார்கள்.பள்ளிகளிடமிருந்து மட்டும் ரூ 12 மில்லியன் வசூலாகியுள்ளது.
மேலும் மார்ச் 1 ம் தேதி துபாயில் இந்தியக் கண்காட்சி 2001 என்ற கண்காட்சியை நடத்த துபாய் திட்டமிட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருவாயும்குஜராத் மாநில மக்களுக்காகக் கொடுக்கப்படும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications