கல்குவாரி வெடி விபத்தில் கணவன் - மனைவி சாவு

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

ஒசூர் அருகே கல்குவாரியில் வெடித்துச் சிதறிய கற்கள் விழுந்து இளம் தம்பதியினர் இறந்தனர்.

ஒசூர் அருகே உள்ள புக்காசகரம் என்ற இடத்தில் கல்குவாரிகள் அதிகமாக உள்ளன. இந்தக் குவாரிகளில் வெடிவைத்து கற்கள் உடைப்பது வழக்கம்.

இந்த நிலையில் திங்கள்கிழமை ராமசந்திரம் என்ற கிராமத்தில் கல் உடைப்பதற்காக 5 முதல் 6 இடங்களில் வெடிவைத்து பாறையை உடைத்தனர்.

இங்கு வெடித்த கற்கள் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விழுந்தன. அப்போது அங்குள்ள ஒருதோட்டத்தில் மல்பரி இலைகளைப் பறித்துக் கொண்டிருந்த ஆனந்தன் (30), ஷேபா (25) ஆகியோர் மீதும்விழுந்தன.

இந்த கற்கள் விழுந்ததில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் கணவன்-மனைவி ஆவர்.காயமடைந்த இருவரும் ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சைபலனின்றி இருவரும் இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+