புத்தர் சிலைகளை அழிக்க தலிபன்கள் முடிவு.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கனில் உள்ள பாமிய கால புத்த சிலைகள் இஸ்லாமிய மதத்திற்கு சம்பந்தமில்லை என்பதால் அழித்துவிட உத்தரவிடப்பட்டதற்கு இந்தியா கண்டனம்தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன் அரசின் தலைவரான முல்லா ஓமர் வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில், ஆப்கன் மியூஸியங்களில் உள்ள பாமிய காலத்து புத்தர்சிலைகள் இஸ்லாம் மதத்திற்கு சம்பந்தமில்லாதவை.

எனவே, அவற்றை அழித்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளார். இதுபற்றிய பத்திரிகை தகவல்களை அடுத்து, அவற்றை பாதுகாக்குமாறுகோரப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

குறுகிய மனப்பான்மையை வெளிப்படத்தக்கூடிய இதுபோன்ற உத்தரவுகளை இடுவது முல்லா ஓமருக்கு புதிதல்ல.

ஏற்கனவே, 1998ல் வெளியிட்ட உத்தரவு ஒன்றில், ஆப்கனில் வாழும் இந்துக்கள் தங்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் ஆடைகளை அணியவேண்டும் அல்லது தனித்து காட்டக்கூடிய வகையிலான சின்னங்களை உடலில் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

பழங்கால கலைகளையும், கலாசாரங்களையும் பாதுகாத்துவரும் ஐ.நா.அமைப்பான யுனெஸ்கோ தலிபன் அமைப்பிற்கு விடுத்துள்ள வேண்டுகோளில்

ஆப்கானிஸ்தானின் கலாசாரமானது பெர்ஸியா, கிரீஸ், இந்து, புத்த, மற்றும் இஸ்லாமிய சமயங்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும் ஒரு மையமாக இருந்துவந்துள்ளது. அவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு அம்சங்கள் ஆப்கன் மியூஸியங்களில் உள்ளன.

5ம் நூற்றாண்டை சேர்ந்த பாமினி காலத்தில் பாறைகளில் வடிக்கப்பட்ட புத்தர்சிலை போன்ற அரிய கலை பொக்கிஷங்களை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளதைநிறுத்தி அவற்றை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

புத்தர் சிலையை அழிக்க இலங்கையிலும் எதிர்ப்பு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+