Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யானை பயிற்சியாளரை மணக்கும் இளவரசி

Subscribe to Oneindia Tamil

ஜூரிச் (சுவிட்சர்லாந்து):

சுவிட்சர்லாந்த் சர்க்கஸ் மேலாளரும், யானைப் பயிற்சியாளருமான பிரான்கோ நை தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு, மொனாகோ இளவரசிஸ்டீபனியைத் திருமணம் செய்யவுள்ளார்.

சுவிட்சர்லாந்த் சர்கஸ் உலகில் கொடிகட்டிப் பறப்பவர் பிரான்கோ. இவர் சர்கஸ் நடத்தும் வித்தையைக் கண்டுகளிக்க வந்த மொனாகோ இளவரசி ஸ்டீபனி,இவரிடம் மனதைப் பறி கொடுத்தார். இவரும்தான்.

சுவிஸ் தேசிய சர்க்கஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரான்கோ, இளவரசி ஸ்டீபனியைத் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பிரான்கோவும்அவரது மனைவியும் விவாகரத்து செய்து கொள்வது என முடிவெடுத்து விட்டனர். கணவனும், மனைவியும் பிரியத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விவாகரத்துசெய்ய மாட்டார்கள் என்றார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சுவிஸ் நாட்டில் வெளியாகும் ப்ளீக் என்ற பத்திரிக்கையில் ஏற்கனவே செய்திபிரசுரமாகியுள்ளது. இளவரசி ஸ்டீபனியின் செயலாளர் கிறிஸ்டீன் பார்காவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, இதுகுறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை.இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

ஆனால் ப்ளீக் பத்திரிக்கையோ, பிரான்கோவும், ஸ்டீபனியும் காதலர்கள். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றுசெய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ஸ்டீபனியும், அவரது மூன்று குழந்தைகளும் இருக்கும் புகைப்படமும் பிரசுரமாகியுள்ளது.

46 வயதாகும் பிரான்கோவும், அவரது மனைவி கிளவுடினாவும் (51) 14 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு அன்டனிஎன்ற 12 வயது மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+