நாகலாந்து செல்கிறார் பிரதமர்
கோஹிமா:
நாகாலாந்த் மாநிலம், டோயாங்கில் அமைந்துள்ள நீர் மின்நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர்வாஜ்பாய் மார்ச் மாதம் 28-ம் தேதி நாகாலாந்த் செல்கிறார்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், டோயாங்கில் நீர் மின்நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது.பிரதமர் சென்ற ஆண்டே வந்து நீர் மின்நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார். ஆனால் மூட்டு மாற்றுஅறுவை சிகிச்சை காரணமாக அவரால் வர இயலவில்லை.
24 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய லிகிம்ரோ நீர்மின் நிலையம் அமைக்கும் பணி முடிவடையும்நிலையில் இருக்கிறது. இது அடுத்த ஆண்டு இறுதி முதல் இது செயல்படத் துவங்கும்.
2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் தரமுடைய டிஷு- ஜங்கி பேசின் நீர்மின் நிலையம் குறித்த அறிக்கைதேசிய நீர் மின்நிலைய கழகத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications