ஜவுளி ஏஜன்டைக் கடத்திய ஆளுங்கட்சியினர்
ஈரோடு:
ஜவுளி ஏஜன்டைக் கடத்தி சித்திரவதை செய்த ஆளும் கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாருக்கு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பூங்குன்றனார் வீதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். வயது 40. ஜவுளி புரோக்கரான இவர் சின்னப்பா லே -அவுட்டில் உள்ள குரு என்டர்பிரைசசில் வேலை செய்து வருகிறார். குரு என்டர்பிரைசசஸ் குமாரசாமி என்பவருக்குச் சொந்தமானதாகும்.
இவர் மூலம் தான் ஜவுளி இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, பணம் வசூலிக்கப்படும்.
இதற்கிடையே, சம்பவத்தன்று திலீப்குமார் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, இவர் வேலை செய்து வந்த குரு என்டர் பிரைசஸ் உரிமையாளர்குமாரசாமி, அவரது உறவினர் சுப்ரமணியம் மற்றும் பலர் சேர்ந்து காரில் திலீப் குமாரைக் கடத்திச் சென்றனர்.
பின்னர் அவரை சேலம் மாவட்ட தி.மு.க.கவுன்சிலர் முருகேசனின் தோட்டத்துக்குக் கொண்டு சென்றனர். திலீப் குமாரை மிரட்டி வெற்றுப் பேப்பர்களில்கையெழுத்து வாங்கி விட்டு அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து திலீப் குமார் போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார், குற்றவாளி ஆளும் கட்சிப் பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர். இதையடுத்து திலீப் குமார் நீதிமன்றத்தில் புகார்கொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆளும் கட்சிப் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றுபோலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, போலீஸார் ஆளும் கட்சி கவுன்சிலர் முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications