திமுக வில் சேர மாட்டோம்: புதிய நீதிக் கட்சி
சென்னை:
திமுக கூட்டணியில் நாங்கள் சேர முயற்சிக்கவில்லை. ஆனால் நாங்கள் திமுக அணிக்கு வரப் போவதாகஅமைச்சர் ஆற்க்காடு வீராசாமி பொய்யான தகவ லை பரப்பி வருகிறார் என புதியநீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென் னையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய நீதிக் கட்சி திமுக அணிக்கு வரவிருப்பதாக சுகாதராத்துறை அ மைச்சர் ஆர்க்காடு வீராசாமிஅதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார். இது தவறான தகவல். நாங்கள் 3-வது அணி அமைப்பதில் மும்முரமாகஇருக்கிறோம். ஏற்கனவே தமிழ் நாடு ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் ஒரு அணியைத் துவக்கியுள்ளோம்.
புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசம், புரட்சித் தலைவர் அதிமுக உள்ளிட்ட 7 கட்சிகள் இந்தக் கூட்டணியில்இடம் பெற்றுள்ளன. மேலும், வி ரைவில், தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், விடுதலைச் சிறுத் தைகள் ஆகியகட்சிக ளையும் எங்கள் கூட்டணிக்கு எதிர்பார்த்துள்ளோம்.
இந்த நிலையில், மூன்றாவது அணியை உருவாக்க விடாமல் தடுக்க சதித் திட்டம் நடக்கிறது. அதன் ஒரு பகுதி யே,ஆற்க்காடு வீராசாமியின் பேட்டி. பொறுப்பான ஒரு கட்சியில், பொறுப்பான ஒரு பதவியில் இருப்பவர் இம்மாதிரிகூறுவது தவறானது.
நாங்கள் அமைக்கப் போவது என்னவோ, 3-வது அணிதான். ஆனால் இது முதல் அணியாக, மக்கள் அணியாகமாறும் என்று அவர் தனது கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications