மின்னணு எந்திரத்தால் தேர்தலில் பிரச்சனை வராது
சென்னை:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை தேர்தல் கமிஷனின் துணை ஆணையர்கள் மறுத்துள்ளனர்.
சென்னையில் 10 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்ட மின்னணு வாக்குபதிவு பற்றிய பயிற்சிக்குப்பின் நிருபர்களிடம் பேசிய துணை தேர்தல் ஆணையர்களான,சுபாஷ் பானியும், சாயன் சட்டர்ஜியும் இம்மறுப்பை வெளியிட்டதோடு,
மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் உள்ள தகவல்களை மாற்ற முடியாத வகையில் ஒருமுறை மட்டும் எழுதப்படக்கூடிய கம்ப்யூட்டர் டிஸ்க்குகள்பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், மின்னணுவாக்குபதிவு எந்திரங்களை இஷ்டத்திற்கு மாற்ற முடியாது.
அந்த எந்திரங்களை வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துமுன் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு சீலிடப்பட்டுவிடும். மேற்கொண்டுஎந்த மாற்றங்களும் செய்யப்பட முடியாது.
இது குறித்த வழக்கில், நீதி மன்ற விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்கும். அது பற்றி தற்போது கூறுவதுநீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.
இந்தியா முழுவதும் 65000 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதனை வாக்காளர்கள் மட்டுமல்லாது, அரசியல் கட்சிகளும்,பத்திரிகைகளும் கூட வரவேற்றுள்ளன.
டெல்லியை சேர்ந்த அமைப்பு ஒன்றின் சர்வேயிலும் இதன் உபயோகத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இனி வரும் காலங்களில் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவதற்காக இந்தாண்டிற்குள் 150 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை லட்சம்வாக்குபதிவு எந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. அடுத்தாண்டும் இதே எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்கப்படும்.
இந்திய தேர்தல் முறையும், அதற்கு பயன்படுத்தப்படும் வாக்குபதிவு எந்திரங்களும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நடைமுறையிலிருந்துமாறுபட்டவை.எனவே, அவற்றோடு இத்தேர்தல் நடவடிக்கைகளை ஒப்பிட முடியாது.
தற்போதைய தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளிடமிருந்து தேவையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.வரும் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும்.
அனைத்து வாக்காளர்களுக்கும் மார்ச் மாதத்திற்குள் அடையாள அட்டை வழங்கப்படவில்லையெனில், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து பின்னர்அறிவிக்கப்படும் என்றனர்.
பேட்டியின் போது உடனிருந்த தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கி, தமிழகத்தில் உள்ள 4.79 கோடி வாக்காளர்களில் 3.25 கோடி வாக்காளர்களுக்குஅடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுஎன்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications