பஸ், வேன் மோதலில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
தாராபுரம் அருகே மார்ச் 2ம் தேதி காலை பஸ்- வேன் மோதிக் கொண்டதில் 3 பேர் இறந்தனர். 11 பேர்காயமடைந்தனர்.
ராமநாதபுரம் கடலாடியிலிருந்து ஒரு தனியார் கம்பெனியைச் சேர்ந்த ஊழியர்கள் கோவை வந்தனர். இவர்களைகோவையில் விட்டு விட்டு வேன் டிவைர் ரவி (30), மீண்டும் கடலாடிக்குத் திரும்பினார். அப்போது வழியில்நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றார்.
கோவையிலிருந்து தாராபுரம் அருகே உள்ள சங்கம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போதுமதுரையிலிருந்து கோவை நோக்கி ஒரு அரசு பேருந்து வந்தது. இதில் வேன் நொறுங்கியது.
வேனில் பயணம் செய்த 3 ஆண்கள் அந்த இடத்திலேயே இறந்தனர். இறந்தவர்களின் விபரம் குறித்து போலீசார்விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வேனில் இருந்த 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications