புத்தர் சிலை உடைப்பு: பாக்.எதிர்ப்பு
இஸ்லாமாபாத்:
பாமியான் நகரில் உள்ள 2 பெரிய புத்தர் சிலைகள் உள்பட நாடு முழுவதும் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதுகுறித்து பாகிஸ்தான் அரசு கருத்து எதுவும் கூறாமல் மெளனம் சாதித்து வந்தாலும் பாகிஸ்தானில் உள்ள சிலஅரசியல் தலைவர்கள், சமூக சேவகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தாலிபன் தீவிரவாதிகள், சிலைகளைத் தொழுவது இஸ்லாமியச்சட்டத்துக்கு எதிரானது என்பதால் நாடு முழுவதிலுமுள்ள புத்தர் சிலைகளை உடைக்கும்படி உத்தர விட்டுள்ளனர்.
இதையடுத்து பாமியான், காபூல், காஞ்னி, ஹெரத், கந்தகர் ஆகிய இடங்களில் உள்ள புத்தர் சிலைகள்உடைக்கப்படுகின்றன.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தற்காலிகத்தலைவர் ஜாவத் ஹாஸ்மி கூறுகையில், புத்தர் சிலைகளை உடைப்பதன் மூலம் சர்வதேச நாடுகளின் வெறுப்பைச்சம்பாதித்துக் கொள்ளப் போகிறது ஆப்கானிஸ்தான் அரசு என்றார்.
இஸ்லாமிய சட்டப்படி, சிலை வழிபாடு கூடாது என்றாலும், புத்தர் சிலைகளை உடைப்பது இஸ்லாம் மதத்திற்கும்,பெளத்த மதத்திற்கும் விரோதமான, கீழ்த்தரமான செயலாகும். இஸ்லாம் மதச்சட்டப்படி சடங்குகள், ஊர்வலங்கள்இஸ்லாம் மதத்திற்கு எதிரானதாகும்.
ஆனால் இஸ்லாமியர்கள் சடங்குகள், ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்துகிறார்கள். அதனால், இஸ்லாம் சட்டம்என்று கூறிக் கொண்டு புத்தர் சிலை உடைக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்றார்.
பாகிஸ்தானில் வாழும் ஆப்கான் அகதி பாஃவாத், புத்தர் சிலைகளை உடைப்பது தவறு என்று கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications