போதைப் பொருட்கள் கடத்தி புலிகள் நிதிவசூல்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

போதைப் பொருட்கள் கடத்தி, விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்துக்கு நிதி வசூல் செய்வது குறித்து தங்களுக்குசெய்திகள் எதுவும் கிடைக்கவில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

முன்னதாக, சர்வதேச போதைப் பொருட்கள் கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட அறிக்கையில்,

விடுதலைப் புலிகள், தங்களது ஆயுத பலத்தையும், பண பலத்தையும் பெருக்கிக் கொள்வதற்காக போதைப்பொருட்களைக் கடத்துகிறது. இந்த விஷயத்தில் இலங்கை அரசிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளது.

இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் இலங்கையையே களமாகப் பயன் படுத்துகிறார்கள். பின்னர்இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

ஆனால், தெற்காசியாவிலிருந்து கடத்தப்படும் போதைப் பொருட்கள் அமெரிக்காவைச் சென்றடைகிறதா என்பதுகுறித்து விவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், போதைப் பொருட்கள் கடத்தி அமெரிக்கா நிதி வசூல்செய்கிறது என்ற தகவல்கள் அமெரிக்க உளவுத்துறையினரும் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கிறது.

இதற்கிடையே, இந்த அறிக்கை குறித்து தமிழகப் போலீசார் கூறுகையில், இலங்கையிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவது உண்மைதான்.

இந்திய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீசார் போதைப் பொருட்கள் கடத்தியது தொடர்பாகஇலங்கையைச் சேர்ந்த பலரைக் கைது செய்துள்ளனர். கடந்த வருடம் கைது செய்யப்பட்ட வர்களிடமிருந்து 100கிலோ ஹெராயினை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர் என்றனர்.

ஆனால், அமெரிக்காவோ, விடுதலைப் புலிகள் போதைப் பொருட்கள் கடத்தி தங்கள் இயக்கத்துக்கு நிதிசேர்க்கிறது என்பது குறித்தான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+