ரயில் நிலைய கொள்ளை: தமிழ் தீவிரவாதிகள் கைவரிசை?
சென்னை:
சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் சனிக்கிழ மை இரவு நடந்த கொள் ளைச் சம்பவம் குறித்து விசாரிக்க 6சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில் வே ஐ.ஜி. திலகவதி தெரிவித்துள்ளார்.
சென்னை மாம்பலம் ரயில்வே டிக்கெட் பதிவு அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு பயங்கரக் கொள் ளை நடந்தது.இரவு 8.30 மணியளவில் அன்றைய டிக்கெட் வசூல் பணத் தை கேஷியர் சையத் அலி மற்றும் சூபர் வைசர்வெங்கட்ராமன் ஆகியோர் எண்ணி ஒரு பையில் வைத்துக் கொண்டு கிளம்பினர். பணப் பையுடன் இருவரும்அறையை விட்டு வெளி யே வந்த போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்க ளை தடுத்து நிறுத்தியது.
அவர்கள் கையில் கத்தி, அரிவாள், உருட்டுக் கட் டைகள் ஆகியவை இருந்தன. துப்பாக்கி ஏந்திய காவலர்களைமுதலில் தாக்கிய அவர்கள் பின்னர் சையத் அலி கையில் இருந்த பணப் பையை பறித்தனர். பின்னர் அலி மற்றும்வெங்கட்ராமன் ஆகியோரையும் தாக்கி விட்டு இருளில் தப்பி விட்டனர்.
மக்கள் கூட்டம் நிறைந்த மாம்பலம் ரயில் நிலையத்தில் நடந்த இந்த திடீர் கொள் ளைச் சம்பவம் பெரும்பரபரப்புக்குள்ளாக்கியது.
தமிழ்த் தீவிரவாதிகளா?:
இதற்கிடையே கொள்ளைச் சம்பவம் நடந்த மாம்பலம் ரயில் நிலைய பகுதியில் 2 பெட்ரோல் குண்டுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் இது திட்டமிடப்பட்ட கொள்ளைச் சம்பவமாக கருதப்படுகிறது. இந்தசம்பவத்தில் 3 பேர் மட்டுமல்லாது, மேலும் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இதற்கிடையே கொள் ளையர்கள் குறித்துத் துப்புக் கொடுத்தால் ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என்று போலீஸ்தெரிவித்துள்ளது. மேலும் கொள் ளையர்களைப் பிடிப்பதற்காக 6 சிறப்புப் போலீஸ் குழுக்களும்அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் ஐ.ஜி. திலகவதி தெரிவித்துள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications