காமராஜர் சிலை உடைப்பு
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டையில் உள்ள காமராஜர் உருவச் சிலையை உடைத்த மர்ம ஆசாமிகளைப் போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி, சேலம் செல்லும் ரோட்டின் சந்திப்பில் உளுந்தூர் பேட்டை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இந்த காமராஜர் சிலையின் ஒரு கையை யாரோ சில மர்ம ஆசாமிகள் உடைத்து விட்டுச் சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து காமராஜர் சிலையை உடைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications