தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனை: பொருளாதாரம் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் சம்பள உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தி வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால் நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவுஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது தேயிலை ஏற்றுமதிதான். தொழில்துறை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொருளாதாரத்துறைநிபுணர்கள் தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்படும்என்று கூறியுள்ளனர்.

அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் தேயிலை தொழிலாளர்களின் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்கிறார். இருப்பினும் பிரச்சனைதீர்ந்தபாடில்லை.

முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட தேயிலை மற்றும் ரப்பர் தொழிலாளர்கள் பிரச்சனையை இலங்கை அரசே தீர்த்து வைத்திருக்கிறது.

இதுதவிர கடந்த மார்ச் மாதம் தேயிலை தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து எஸ்டேட் ஊழியர்கள், அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதும்அவர்களது பிரச்சனை தீர்க்கப்படவில்லை.

சிலோன் தேயிலை வர்த்தக சங்க தலைவர் டிக்கி ஜூரியான்ஸ் கூறுகையில், எங்களுக்கு சம்பள உயர்வு கண்டிப்பாகத் தேவை. சம்பள உயர்வு தரவில்லையென்றால் நாங்கள் தொடர்ந்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுவோம். சர்வதேச நாடுகளிலிருந்து தேயிலை வாங்குபவர்களுக்கும்போராட்டத்தினால் பிரச்சனை ஏற்படும் என்றார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் சங்கத்தைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் ரூ 400 சம்பள உயர்வு தரக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில வருடங்களில் கொடுத்து வந்ததைப் போல் தற்போதும் சம்பள உயர்வு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் பல பிரச்சனைக்குள்ளாவார்கள் என்றும் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

1999 ம் ஆண்டு இலங்கை 284 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை உற்பத்தி செய்தது. இவற்றில் 268 மில்லியன் கிலோ கிராம் ஏற்றுமதிசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+