வாக்கு பதிவு இயந்திரங்கள் தமிழகம் வந்தன
காஞ்சிபுரம்:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக முதல் கட்டமாக 250மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் எல்லா தொகுதிகளிலும்மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை உபயோகப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
காஞ்சிரத்தில் இருக்கும் 9 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன. அதற்கு மொத்தம் 2,905மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் தேவை. தற்போது முதல் கட்டமாக 250 மின்னணுவாக்குபதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன. இந்த இயந்திரங்கள் பெங்களூரில்இருக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து புதன்கிழமை வந்து சேர்ந்தது.
மின்னணு இயந்திரங்களையும் மற்றும் தேவையான உபகரணங்களையும் மாவட்டஆட்சி தலைவர் சுகுமாறன் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சி தலைவர் நிருபர்களிடம் கூறுகையில், மின்னணு வாக்கு பதிவுஇயந்திரங்களை அந்தந்த வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்ப துணை மாவட்டஆட்சி தலைவர் ஜார்ஜ் தலைமையிலும், பிராந்திய வருவாய்துறை அதிகாரிதலைமையிலும் 12 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்களுக்கும், அரசியல் கட்டி பிரதிதிகளுக்கும் எவ்வாறு மின்னணுவாக்கு பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications