திமுகவிடம் 62 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.க.
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 62 இடங்களில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தமிழக பாரதிய ஜனதாகட்சித் தலைவர் கிருபாநிதி வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் பா.ஜ.க வுக்கு 62 இடங்களில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. அதனால் தேர்தலில் போட்டியிட 62 இடங்கள் ஒதுக்குமாறு தி.மு.கதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் கேட்போம். அதற்காக 62 தொகுதிகள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதியைவற்புறுத்த மாட்டோம்.
முதல்வர் கருணாநிதி எங்களுக்கு நாங்கள் கேட்குமளவு தொகுதிகளை ஒதுக்குவார் என்று நம்புகிறோம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக இரண்டாவது மிகப்பெரிய கட்சியாகத் திகழும். அதில் எவ்வித சந்தேகமுமில்லை.
கூட்டணிக் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் 62 இடங்கள் ஒதுக்கியே தீர வேண்டும் என்று மல்லுக்கட்டுவதில் அர்த்தமில்லை. இது ஒரு சமரச உடன்பாடு.
தமிழகத்தில் எங்களது கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி அதிக அளவு தொகுதிகளை எங்களுக்குக் கொடுப்பார் என்றுநம்புகிறோம்.
தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் எங்கள் கூட்டணிக் கட்சிகளிடையே எவ்வித கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது.
தமிழகத்தில் பாரதிய ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அதிக அளவு தொகுதிகளை கருணாநிதி ஒதுக்குவார் என்று பிரதமர் வாஜ்பாயும்நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபைத் தேர்தலுக்காக பிரதமர் வாஜ்பாயும், உள்துறை அமைச்சர் அத்வானியும் பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள்எப்போது தேர்தல் பிரச்சாரம் செய்வார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கிருபாநிதி கூறினார்.
யு.என்.ஐ.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications