காஷ்மீர்: தீவிரவாதிகளின் தாக்குதல் குறைகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீரில் அமலில் உள்ள சண்டை நிறுத்தத்தினால் தீவிரவாதிகளின் தாக்குதல் குறைந்துள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ்பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் முதல் அமலில் உள்ள சண்டை நிறுத்தத்தின் போது, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தீவிரவாதிகள் 15 முறை முயன்றுள்ளனர்.

அதற்கு முந்தைய 3 மாத காலத்தில் 53 முறை தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர்.

தற்போது 2500 தீவிரவாதிகள் வரை காஷ்மீர் பகுதியில் இருக்கின்றனர். மேலும் 2000 தீவிரவாதிகள் வரை பாகிஸ்தான் பகுதியிலிருந்துஇந்தியாவிற்குள் நுழைய காத்திருக்கினறனர்.

சண்டை நிறுத்தத்தின் போது தீவிரவாதிகள் எல்லையை கடக்காமல் இருக்க இந்திய பாதுகாப்பு படையினர் எல்லையில் விழிப்புடன் இருக்கின்றனர்.

வியாழக்கிழமையன்று காலையில் இரு இடங்களில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு ராணுவ வீரர்கள்தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தனர்.

பாதுகாப்பு படை மீதான தாக்குதல்கள் தொடர்ந்தாலும் தீவிரவாதிகள் தாக்குதல்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+