திரிபுரா: ஆதிவாசி கடத்திக் கொலை
Subscribe to Oneindia Tamil
அகர்தலா:
திரிபுராவின் கொரில்லா தீவிரவாதிகள் ஆதிவாசி ஒருவரை கடத்தி சென்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
வடக்கு திரிபுராவின் பர்சாரா கிராமத்தை சேர்ந்த ஆதிவாசி ஒருவர் கொரில்லா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். பிப்ரவரி 25ம் தேதி கடத்திய அவரைபுதன்கிழமையன்று இரவு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஹரதன் ராய் என்ற ஆசிரியரின் எலும்புக் கூடை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த 99ம் ஆண்டு கடத்தப்பட்ட ராயை விடுவிக்க அவரது குடும்பத்தினர் 1.40 லட்சம் ரூபாய் வரை அளித்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட போதும்தீவிரவாதிகள் அவரை விடுவிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications