டி.டி, ரேடியோவில் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகள்
டெல்லி:
2001ம் ஆண்டை பெண்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளதையடுத்து, தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்திய ரேடியோ நிகழ்ச்சிகளில் தினமும் ஒரு மணிநேரம்பெண்களுக்கென ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் கல்வி மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை இந்த மகளிர் நேரத்தில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டை பெண்களின்மேம்பாட்டிற்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டு முழுவதும் பெண்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனும், ஆல் இந்திய ரேடியோவும் ஒளிபரப்பும் என மத்திய தகவல்ஒளிபரப்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி வியாழக்கிழமையன்று டெல்லியில், சத்ருபா என்ற ஒளி-ஒலி நிகழ்ச்சியில் பேசிய போது சுஷ்மா இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 50 ஆண்டுகளில் சமூகத்தில் பெண்களின் நிலை மேம்பட்டு வந்துள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களிடையே நிலவும் சமுதாயஏற்றத்தாழ்வுகளை நீக்க அதிகம் பாடுபட வேண்டியிருக்கிறது என்றார்.
நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியமானது. நாட்டில் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர் எனநிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ரமேஷ் பைஸ் தெரிவித்தார்.
விழாவில் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சுமித்ரா மகாஜன், நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் மேம்பாடு அவசியம்என்றார்.
இசை நிகழ்ச்சியான சத்ருபாவில் புராண காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை சமுதாயத்தில் பெண்களின் நிலை பற்றி விளக்கப்படுகிறது.
பிரபல பாடகர் பீம்சேன் ஜோஷி, கதாசிரியர் பி.வி.கராந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் சத்ருபா நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்தயாரித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications