காங்கிரஸ் அதிருப்தி
சென்னை:
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் காங்கிரசை ஜெயலலிதா கலந்துஆலோசிக்கவேயில்லை.
முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ்- காங்கிரஸ் கடசிகளுக்கு மொத்தமாக 50தொகுதிகள் தருவதாகக் கூறிய ஜெயலலிதா பின்னர் அதை மீண்டும் பழையஎண்ணிக்கையான 45 ஆகக் குறைத்துவிட்டார்.
இதையடுத்து மூப்பனார் தரப்பிலிருந்து பெரும் முயற்சி செய்ய்படடதையடுத்து இந்தஎண்ணிக்கையை 47 ஆக ஜெயலலிதா உயர்த்தியுள்ளார்.
இதில் 10 இடங்களை மட்டுமே காங்கிரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் வழங்கும்.முன்பு 55 இடங்கள் கிடைக்கும் இதில் 16ல் காங்கிரஸ் போட்டியிடும் என டெல்லியில்உட்கார்ந்து கொண்டு அந்தக் கட்சியின் தலைவர்கள் அறிக்கை விட்டனர்.
ஆனால், அவர்களை ஜெயலலிதா கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.மொத்தமே 47 தான் என்று கூறிவிட்டார். இதை மீண்டும் 50 ஆக உயர்த்த மூப்பனார்முயன்று வருகிறார்.
என்ன ஆனாலும் சரி பாண்டிச்சேரி ஆட்சியை பாட்டாளி மக்கள் கட்சியிடமிருந்துபறித்து காங்கிரசுக்கு தர முடியாது என்பதில் ஜெயலலிதா மிகவும் கராராகவேஇருக்கிறார்.
அங்கு அதிமுக கூட்டணி வென்றால் முதல் இரண்டரை ஆண்டுகாலம் பாட்டாளிமக்கள் கட்சி ஆட்சி நடத்தும், கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால் அடுத்த இரண்டரைஆண்டுகால ஆட்சியை காங்கிரசுக்குத் தரத தயார் என ஜெயலலிதா கூறிவிட்டார்.
மொத்தமாக பாண்டிச்சேரி ஆட்சி எங்களுக்குத் தான் வேண்டும் என்ற காங்கிரசின்கோரிக்கையை ஜெயலலிதா திட்டவட்டமாக நிராகரத்துவிட்டார்.
வேண்டுமானால் பாண்டிச்சேரியில் அதிமுக-பா.ம.கவை எதிர்த்துக் கூடகாங்கிரஸ்-த.மா.கா போட்டியிடலாம் எனவும் கூறிவிட்டார்.
தமிழகத்தில் ஒரு கூட்டணி, பாண்டிச்சேரியில் இன்னொறு கூட்டணி என்றால் மக்கள்சிரிப்பார்கள் என காங்கிரஸ் சொல்லி வருவதை ஜெயலலிதா காதில் வாங்கவேதயாராக இல்லை.
மேலும் கூட்டணி தொடர்பாக இனி காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை கூடநடத்த மாட்டேன் என்ற நிலையை ஜெயலலிதா எடுத்துவிட்டார். எதுவாக இருந்தாலும்மூப்பனார் மூலமாகத் தான் பேச வேண்டும் எனவும் காங்கிரசுக்கு அவர் நிபந்தனைவிதித்துவிட்டார்.
இதனால் காங்கிரஸ் கடும் கோபத்தில் உள்ளது. ஆனால், மூப்பனாரேஜெயலலிதாவிடம் சரணாகதி அடைந்துவிட்டதால், ஜெயாவை விட்டால் வேறுவழியே இல்லை என்ற பாவப்பட்ட நிலைக்கு காங்கிரஸ் தள்ளபட்டுள்ளது.
இன்னும் கொஞ்சம் சண்டை போட்டு பார்த்துவிட்டு மூப்பனார் ஸ்டைலில் காங்கிரசும்ஜெயலலிதாவின் ஆர்டரை ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications