அதிமுகவிற்கு தேவர் பேரவை ஆதரவு
கோவை:
வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க அணியை ஆதரிக்க வேண்டும் எனவும், மூடிய மில்களைத் திறக்க வேண்டும் எனவும் கோவையில்நடந்த தேவர் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவையில் தேவர் பேரவையின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு கே.என் சுவாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள்பூதபாண்டியன், டேவிட் ஜான் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:
வரும் சட்டசபைத் தேர்தலில் அனைத்து மக்கள் தேவர் பேரவையினர் தங்கள் ஆதரவினை அ.தி.மு.க.விற்கு தெரிவிக்கவேண்டும். கோவையில் மத்திய மாநில அரசுகள் மூடிக்கிடக்கும் மில்களை உடனடியாகத் திறக்க வேண்டும்.
கள்ளர், மறவர், அகமுடையார், ஆகிய பிரிவுகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும். மக்கள் தொகைஅடிப்படையில் தேவர்களை அரசு பணியில் சேர்க்க வேண்டும்.
ரிசர்வ் தொகுதிகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வேண்டும். சாதி மதக் கலவரங்களைதண்டித்து, அதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications