த.மா.கா.-காங்கிரசுக்கு 47 இடங்கள் ஒதுக்கினார் ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு கூட்டாக 47 இடங்களை ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இதில் காங்கிரஸ்கட்சிக்கு 9 முதல் 12 இடங்கள் வரை மூப்பனார் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.

பாண்டிச்சேரியில் அதிமுக-பாமாக கூட்டணி ஒரு அணியாகவும் த.மா.கா.-காங்கிரஸ் தனி அணியாகவும் போட்டியிட உள்ளன.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் சனிக்கிழமை த.மா.க. தலைமை அலுவலகமான சததியமூர்த்தி பவனில்நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களுக்கு 47 இடங்கள ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இதில் காங்கிரசுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பதை பேசிமுடிவு செய்வோம்.

பாண்டிச்சேரி குறித்து பேசவில்லை. அது தனி மாநிலம். அந்த மாநில விவகாரம் குறித்து பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர்நாராயணசாமியிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சர்பாக பேச அக் கட்சி என்னை அங்கரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்என்னைச் சந்தித்துப் பேசினார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இந்தத் தேர்தலில்ஜெயலலிதா மீதான ஊழல் ஒரு பிரச்சனையாக இருக்காது.

ஆட்சியில் இருப்பவர்கள் தான் (திமுக) ஊழல் செய்வார்கள்.

ஜெயலலிதாவுக்கு மக்கள் தண்டனையைக் கொடுத்துவிட்டார்கள். இப்போது ஊழலை விட மதவாதம் தான் பெரிய பிரச்சனையாகஉள்ளது. ஜெயலலிதா மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. (ஜெயாவின் ஊழல வழக்குகள் தொடர்பான பலகேள்விகளுக்கு மூப்பனார் பதிலளிக்கவில்லை)

அதிமுக கூட்டணி தான் வெல்லும். ஜெயலலிதாவுடனான தேர்தல் ஒப்பந்தத்துக்கு ப. சிதம்பரம் ஒப்புதல் அளித்தாரா என்றுகேட்கிறீர்கள். இதை நீங்கள் (நிருபர்கள்) அவரிடம் தான் கேட்க வேண்டும். பிரச்சாரம் குறித்து அதிமுகவுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம்.

Moopanar - Jayalalithaநான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். நான் இப்போது எம்.பியாக இருக்கிறேன். அதிமுக கூட்டணி ஜெயித்தால் நான்முதல்வராவேனா என்ற பேச்சே இப்போது தேவையில்லை.

பட்டாளி மக்கள் கட்சியை நாங்கள் ஜாதிக் கட்சியாக பார்க்கவில்லை. நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள். அது ஒரு அரசியல்கட்சி தான். காங்கிரஸ்-த.மா.கா. இணைப்புப் பிரச்சனை இப்போது எழவேயில்லை என்றார் மூப்பனார்.

பேட்டியின்போது எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராஜன் மற்றும் பல தலைவர்கள் உடன் இருந்தனர்.

உடல் நலக் குறைவு காரணமாக மூப்பனாரால் சரியாக பேச முடியவில்லை. இதனால், எஸ்.ஆர்.பியும் ஜெயந்தியும் அவருக்குமொழி பெயர்ப்பாளர்கள் போல செயல்பட்டனர்.

காங்கிரசின் பரிதாபம்:

தமிழகத்தில் 15 சீட், பாண்டிச்சேரி ஆட்சி ஆகியவற்றை கேட்டு வந்த காங்கிரசுக்கு 12 எம்.எல்.ஏ. சீட்கள் மட்டுமே கிடைக்கும்எனத் தெரிகிறது. பாண்டிச்சேரி குறித்து ஜெயலலிதாவிடம் ஏதும் பேசவில்லை என மூப்பனார் தெரிவித்துவிட்டதில் இருந்துஅங்கு அதிமுக-ப.மா.கா. ஒரு அணியாகவும் த.மா.கா.-காங்கிரஸ் ஒரு அணியாகவும் போட்டியிடப் போவதுஉறுதியாகிவிட்டது.

தமிழகத்தில் மட்டும் த.மா.கா, காங்கிரசுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.

திருச்சியில் அதிமுக போட்டி:

அதே போல கடந்த முறை திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், இம் முறை அங்கு தானேபோட்டியிடப் போவதக அதிமுக அறிவித்துவிட்டது. இதனால் காங்கிரசுக்கு இங்கு போட்டியிடும் வாய்ப்பும் பறிபோய் விட்டது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+