தி.மு.கவைத் தோற்கடிக்க தேர்தல் ஆணையம் சதி
ஈரோடு:
தி.மு.க வைத் தோற்கடிக்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என மாநில கைத்தறித் துறை அமைச்சர்என்.கே.கே பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு தமிழக கைத்தறித் துறைத் அமைச்சர் என்.கே.கே பெரியசாமி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் 42 தொகுதிகளில் 31 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி தி.மு.கவைத் தோற்கடிக்க தேர்தல் ஆணையம் சதித் திட்டம்தீட்டியுள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றுமுள்ள குறைகள் குறித்து நான் தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதி விட்டேன்.
ஆனால், இது வரை எந்தப் பதிலும் தேர்தல் ஆணையத்திடமிருந்து எனக்கு வரவில்லை. மேலும், நேரிலும் இது குறித்து விளக்கம் கேட்டும் கூட சரியானபதில் இல்லை.
வாக்களர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களைச் சேர்க்கவும், முகவரி மாற்றத்தைத் தெரிவிக்கவும் படிவங்கள் எண் 6, 7, 8 ஆகியவை உள்ளன.
இவை அதிக அளவில் வந்து குவிந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த படிவங்களை முறையாகப் பரிசீலனை செய்யும் முன்பே வாக்காளர்பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியுள்ளனர்.
பெயர் நீக்கம் செய்வதற்கு எவ்வித முயற்சியோ, அல்லது பரிசீலனையோ இல்லாமல் உடனடியாகப் பெயர் நீக்கம் செய்துள்ளனர். ஒவ்வொருவாக்காளரையும் சரிபார்க்க 50 பைசா வீதம் ஆணையம் செலவிடுகிறது.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள், அந்த முகவரியில் ஆள் இல்லையென்றால், பெயரையே நீக்கி விடுகின்றனர்.
முகவரியில் ஆள் இல்லாத நிலையில் அவர்கள் எங்குள்ளனர், வெளியில் சென்றுள்ளனரா என்பது பற்றிக் கூட யாரும் கவலைப் படுவதில்லை.
இவ்வாறு தமிழகம் முழுவதிலும் 42 தொகுதிகளில் மட்டும் 31 லட்சம் பேரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இந்த புகாருக்குப் பதில் அளித்தால்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என்ற காரணத்திற்காக எழுத்து பூர்வமாக பதில் அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
எனவே வருகிற பொதுத் தேர்தலை முறையாக தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என கூறினார் என்.கே.கேபெரியசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications