மெல்ல இனி த.மா.கா. உடையும்?
சென்னை:
தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி தோன்றியுள்ளது.
அ.தி.மு.க.வுடன் 32 சீட்டுகளுக்காக கூட்டணி வைத்துக் கொண்டதில் பல தலைவர்கள் அதிருப்தியுடன்காணப்படுகின்றனர். தமிழ் மாநில காங்கிரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்து 47 சீட்டுகள் என அ.தி.மு.ககொடுத்துள்ளது.
இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 32 சீட்டுக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 15 சீட்டுக்களும் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. த.மா.கா.வின் 32 சீட்டுக்களில் அதன் தோழமைக் கட்சிகளான இந்திய குடியரசுக் கட்சிமற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் கொடுக்க மூப்பனார் முடிவுசெய்துள்ளார். அப்படி கொடுத்தால், தமாகாவுக்கு 30 சீட்டுக்கள் மட்டுமே மிஞ்சும்.
இந்த நிலையில், வெறும் 30 சீட்டுக்களுக்காக இத்தனை நாட்களாக ஜெயலலிதாவிடம் பேசிக் கொண்டிருந்தோம்என்ற விரக்தியில் உள்ளனர் த.மா.கா.வினரில் ஒரு தரப்பினர்.
ஏற்கனவே அ.தி.மு.க.வுடான கூட்டணி குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.எல்.ஏ. அழகிரி உள்படபலர் அதிருப்தியுடன் இருப்பதாகக் கூறப்பட்டது. கட்சி சார்பில் தேர்தல் கூட்டணி தொடர்பாக நடந்த எந்தக்கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான அதிருப்தி எம்.எல்.ஏ. ஆரூண் மூலம் வெடித்துள்ளது. தமிழகத்தின்மிகப் பெரிய சட்டசபைத் தொகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கத்தின் எம்.எல்.ஏ.தான் ஆரூண்.
தன்மானத்தை இழந்து ஏற்பட்டுள்ள தேர்தல் கூட்டணியை எதிர்த்து கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார்ஆரூண். த.மா.கா. வட்டாரத்தில் ஆரூண் விலகல் முதல் கட்டம் தான். இன்னும் பலர் விலகக் கூடும் என்ற கருத்துநிலவுகிறது.
தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வின்போது மேலும் அதிருப்தி வெடிக்கக் கூடும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், தேர்தல் முடிவுக்குள் த.மா.கா பல துண்டுகளாக சிதறும் வாய்ப்பும்உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications