For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாருக்கு எத்தனை சீட்? திமுகவில் குழப்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Karunanidhiதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குஎத்தனை இடம் கிடைக்கும் என்பது குறித்து சிக்கல் எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சிகளாக பாரதீய ஜனதா மற்றும் மதிமுகஆகியவை உள்ளன. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம பலத்தில் உள்ளவை. ஏற்கனவேபாட்டாளி மக்கள் கட்சி இக்கூட்டணியில் இருந்தபோது, தொகுதிகளை ஒதுக்குவதில்திமுகவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது பா.ம.க. இல்லாத நிலையில்தொகுதிப் பங்கீடு அவ்வளவு சிரமமாக இருக்காது எனத் தெரிகிறது.

பாரதீய ஜனதாக் கட்சியைப் பொருத்தவரைஅக்கட்சி முதலில் 62 இடங்களில் வெற்றிபெறுவோம் எனக் கூறியிருந்தது. அந்தத் தொகுதிகளின் எண்ணிக்கையையும்,தொகுதிப் பங்கீட்டுப் பேச்சின்போது திமுக குழுவிடம் தெரிவித்தது. இருப்பினும்பேச்சுவார்த்தை முடிவில் 23 இடங்கள் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மிகவும்சந்தோஷமாக இதை ஏற்பதாக அவர்களும் தெரிவித்து விட்டனர்.

அதற்கு முன்பே பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்ட மதிமுகவுக்கு இன்னும் எத்தனைஇடங்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. தற்போது, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கியஅளவுக்கு மதிமுகவுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டிய நிலை திமுகவுக்குஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளையும் பாரபட்சமாக பார்க்க முடியாத நிலை நிலவுகிறது.

ஒன்று பா.ஜ.க.வுக்குக் கொடுத்த அளவில் சீட்டுக்கள் மதிமுகவுக்குக் கொடுக்கப்படவேண்டும். அல்லது இவர்களில் ஒருவருக்கு மட்டும் அதிக சீட்டுக்கள் கொடுக்கவேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் மற்ற கட்சி மனஸ்தாபம் கொள்ளும் என்பதால்பா.ஜ.க.வுக்குக் கொடுத்த எண்ணிக்கையிலேயே சீட்டுக்கள் ஒதுக்க கருணாநிதிதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம், கூட்டணியில் வேறு கட்சிகளும் உள்ளன. எம்.ஜி.ஆர் கழகம்,எம்.ஜி.ஆர். அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், குமரி அனந்தனின்தொண்டர் காங்கிரஸ் மற்றும் சில சிறு கட்சிகள். இவர்களுக்கும் சீட் கொடுக்கவேண்டிய நிலை உள்ளது. ஆர்.எம்.வீரப்பனுக்குக் கடந்த தேர்தல்களில் மனதில் இடம்கொடுத்தார் கருணாநிதி. ஆனால் இம்முறை தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவேண்டும் என்று வீரப்பன் விரும்புகிறார்.

அதிமுக தரப்பில் மிக எளிதாக தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. ஆனால் திமுக தரப்பில்கட்சிகள் அதிக அளவில் இருப்பதால் கொஞ்சம் கடினமானதாகவே அது இருக்கும்என்பது மறுக்க முடியாதது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X