கோல்கத்தா டெஸ்ட்: பாலோ-ஆனை தவிர்க்குமா இந்தியா?

Subscribe to Oneindia Tamil

கோல்கத்தா:

இந்திய -ஆஸ்திரேலிய 2வது டெஸ்ட்:

ஆஸி.க்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா பாலோ-ஆனை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. 246ரன்கள் எடுத்தால் பாலோ-ஆன்தவிர்க்கலாம் என்ற நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

இதனால், இந்தியா பாலே-ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இப்போட்டியிலும் இந்திய வீரர்களின் ஆட்டம்சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் ஆஸ்திரேலியா இப்போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் உண்டு.

ஞாயிறன்று ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கிய இந்திய - ஆஸி. 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆடிய ஆட்டத்தைபார்த்ததும் அந்த அணி 400 ரன்களை கடந்து விடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப அந்த அணியும் முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள்எடுத்தது.

ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை எடுத்திருந்த ஆஸ்திரேலியாவை ஹர்பஜன்சிங்கின்பந்து வீச்சு நிலைகுலையச் செய்தது. தனது 16வது ஓவரில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்- ட்ரிக்சாதனை புரிந்தார் ஹர்பஜன்.

69 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் இந்திய பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்ட் போட்டியில் ஹாட் ட்ரிக்சாதனை புரிவது இதுவே முதல் முறையாகும்.

ரிக்கி பாண்டிங், கில் கிறிஸ்ட் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் தொடர்ந்து ஆட்டமிழந்த போதும் கலங்காதஸ்டீவ் வாஹ் , ஜில்லெஸ்பியுடன் இணைந்து 9வது விக்கெட்டிற்கு 133 ரன்களை எடுத்ததை அடுத்துஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்துள்ளது.

3 சிக்ஸர்கள் அடித்த ஹேடன்(97 ரன்கள்) தனது சதத்தை தவறவிட்டார். அவருக்குப் பதில் ஸ்டீவ் வாஹ்(110ரன்கள்) தனது 25வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணியின் தரப்பில் அதிக நேரம் பந்து வீசியஹர்பஜன் சிங் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியாவிற்கு ஆரம்பமே சோகமாக அமைந்தது(வழக்கம்போலத்தான்). ரன் எதுவும் எடுக்காத நிலையில் இந்தியா, ரமேஷின் விக்கெட்டை இழந்தது.

இந்திய அணி 50 ரன்கள் எடுக்கும் முன்பே, எஸ்.எஸ்.தாஸ் மற்றும் டெண்டுல்கரின் விக்கெட்டுகளை இழந்து 48/3என்ற நிலையை அடைந்தது. பின்னர் வந்த வீரர்களில் டிராவிட் 25 ரன்களும், கங்குலி 28 ரன்களும் எடுத்துஅவுட்டாகினர்.

ஆஸி.யின் கிளென் மெக்ராத், தான் வீசிய 11 ஓவரில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைவீழ்த்தினார். ஜில்லெஸ்பியும், காஸ்பரோவிக்சும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஷேன் வார்னே தன் பங்கிற்கு ஒரு விக்கெட்டை எடுத்துள்ள நிலையில் 2ம் நாள் முடிவடைந்துள்ளது. முதல்டெஸ்டை போன்ற இந்த போட்டியும் 3 நாட்களில் முடியுமா அல்லது மேலும் ஒரு நாள் நீடிக்குமா என்பதைநாளைய ஆட்டம் தான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+