அதிமுக 141 தொகுதிகளில் போட்டி .. ஜெ. அறிவிப்பு
சென்னை:
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுமுழுவதுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக 141 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி அதிமுக 141 தொகுதிகளிலும், திருச்சி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறது. தமாகா, காங்கிரஸ்கட்சிகள் மொத்தமாக 47 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி 27 தொகுதிகளில் நிற்கிறது.
மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 8 இடங்களிலும், இந்திய தேசிய லீக், பார்வர்ட் பிளாக்,தமிழக முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன் கட்சி) ஆகியவை தலா 1 இடங்களில் போட்டியிடும் எனஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்ததால், தொகுதிப் பங்கீடு குறித்தஇறுதி அறிவிப்பு வெளியாக தாமதம் ஆனது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பி.பரதன்,மாநில செயலாளர் நல்லகண்ணுவிடம் தொலைபேசி மூலம் பேசினார். இதையடுத்து அதிமுக குழுவினர், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினரைச் சந்தித்துப் பேசினர். அதன் முடிவில், உடன்பாடு ஏற்பட்டது.
அதிமுக கூட்டணியில், இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகளின் தொகுதிப் பங்கீடுகுறித்து இந்த அறிக்கையில் எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications